துணிவு முதல் போர் தொழில் வரை... தீபாவளி விருந்தாக டிவியில் போட்டிபோட்டு ஒளிபரப்பாக உள்ள புதுப்படங்களின் லிஸ்ட்
தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதுப்படங்களை பற்றி பார்க்கலாம்.
Diwali special movies on TV
தீபாவளிக்கு புதுப் படங்கள் ரிலீஸ் ஆவது ஒருபுறம் இருக்க, அன்றைய தினம் வீட்டில் குடும்பத்தோடு பண்டிகையை கொண்டாடுவோரை மகிழ்விக்கும் விதமாக தொலைக்காட்சிகளிலும் புதுப்படங்கள் ஒளிபரப்பப்படுவதுண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு எக்கச்சக்கமான புதுப்படங்களை சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி, கலைஞர் டிவி ஆகியவை போட்டிபோட்டு ஒளிபரப்ப உள்ளன. அதன் லிஸ்ட்டை தற்போது பார்க்கலாம்.
விஜய் டிவி
விஜய் டிவியில் இந்த ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக இரண்டு புதுப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. அதில் ஒன்று சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன போர் தொழில் திரைப்படம். அதேபோல் அன்றைய தினம் விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்து, தயாரித்த பிச்சைக்காரன் 2 திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கலைஞர் டிவி
கலைஞர் தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்பு திரைப்படமாக நடிகர் அஜித்தின் துணிவு ஒளிபரப்பப்பட உள்ளது. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி இருந்தார். இப்படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்ட கையோடு அதன் சாட்டிலைட் உரிமையையும் தங்களில் கலைஞர் தொலைக்காட்சிக்காக வாங்கியது.
சன் டிவி
சன் டிவியில் தீபாவளி விருந்தாக நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது. இப்படத்தை தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தீபாவளி ஸ்பெஷலாக ஜெமினி டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. இந்த ஆண்டு அதிக வசூலை வாரிக்குவித்த தமிழ்படம் ஜெயிலர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீ தமிழ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் விஷாலின் சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹிட் படமான மார்க் ஆண்டனி ஒளிபரப்பப்பட உள்ளதாம். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஜப்பான் முதல் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வரை... தீபாவளிக்கு பட்டாசாய் ரிலீஸ் ஆக உள்ள தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ