Bigg Boss Elimination: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்கு குட்பை சொல்ல போகும் பிரபலம் இவரா? வெளியான ஷாக்கிங் தகவல்
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரம் வெளியேற உள்ள பிரபலம் குறித்து நெட்டிசன்கள் கணித்து கூறியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
Bigg Boss Season 7 Tamil
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி... இம்மாதம் அக்டோபர் 1-ஆம் தேதி, கோலாகலமாக 18 போட்டியாளர்களுடன் துவங்கியது. ரசிகர்கள் எதிர்பார்த்த சில பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நிலையில் எதிர்பாராத சில பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
Bigg Boss Season 7 Tamil Contestant:
120 கேமராக்கள், 2 வீடுகளுடன் புத்தம் புதிய செட்டப்பில்
துவங்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த 6 சீசங்களையே பீட் பண்ணும் அளவுக்கு சண்டை - சச்சரவுகளுடன் பட்டையை கிளப்பி வரும் இந்த நிகழ்ச்சியில், முதல் வாரத்திலேயே விஜய் வர்மாவுக்கு கமல்ஹாசன் Yellow கார்டு கொடுத்து வார்ன் செய்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் முதல் வாரமே நடந்த எலிமினேஷனில் அனன்யா ராவ் வெளியேறினார்.
No elimination:
இவரை தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த எழுத்தாளரும் நடிகருமான பவா செல்லதுரை... உடல்நிலை காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அடுத்தடுத்து இரண்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதால், இரண்டாவது வாரம் எலிஎமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
This Week Nomination List:
இதைத்தொடர்ந்து, இந்த வாரம் நிக்சன், அக்ஷயா, மணி சந்திரா, விசித்ரா, ஐஸு, விஜய் வர்மா, ப்ரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, விணுஷா, மற்றும் சரவண விக்ரம் ஆகியோர் நாமினேட் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
Vinusha Elimination:
இவர்களில் யார் வெளியேறுவார் என்பதை, இந்த வார ஓட்டிங்கின் அடிப்படையில் நெட்டிசன்கள் மற்றும் பிக்பாஸ் ரசிகர்கள் வழக்கம் போல் யுகத்தின் அடிப்படையில் கூறியுள்ளனர். முதல் வாரத்தில் அனன்யா தான் வெளியேறுவார் என கூறியது போல் நடந்தது, இந்த வாரம் வினுஷா தான் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று, வெளியேறுவார் என ரசிகர்கள் கூறியுள்ளது நிஜமாகுமா? வேறு எதாவது மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Bigg Boss Fans Prediction:
வினுஷா டார்க் ஸ்கின் டோன் மாடலாக பிரபலமாகி, பின்னர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர். பாரதி கண்ணம்மா 2 சீரியலிலும் இவர் நடித்த நிலையில் TRP-யில் இந்த சீரியல் படு மோசமான ரேட்டிங்கை பெற்றதால், இந்த சீரியல் 6 மாதத்தில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D