Sangita: விஜயால் அஜித்துக்கு No சொன்ன சங்கீதா! நழுவிய வாய்ப்பை எண்ணி இப்போது வரை பீலிங்! எந்த படம் தெரியுமா?
90களில் முன்னணி நடிகையாக இருந்த, சங்கீதா - அஜித்தின் சூப்பர் ஹிட் பட வாய்ப்பை தவறவிட்டதாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பீலிங்சுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில், 90-களில் குடும்ப பங்கான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சங்கீதா. இவர் 1978 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக மலையாள திரை உலகில் அறிமுகமாகி, பின்னர் 'என் ரத்தத்தின் ரத்தமே' என்கிற திரைப்படத்தின் மூலம் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானார்.
இதைத் தொடர்ந்து, இதய வாசல், நாட்டுக்கொரு நல்லவன், நாங்கள், வசந்த மலர்கள், சாமுண்டி, தாலாட்டு, கேப்டன் மகள், மகாநதி, உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் இவருக்கு ஹீரோயின் அந்தஸ்த்தை பெற்று தந்த முக்கிய படங்களில் ஒன்று 'பூவே உனக்காக'. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சங்கீதா நடித்திருந்தார்.
இந்த படத்தில் நடிக்கும் போது, தான்... அஜித்தின் காதல் கோட்டை படத்திலும் நடிக்க , இவருக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளது. ஆனால், அப்போது விஜய்யின் பூவே உனக்காக உட்பட சில மலையாள படங்களிலும் பிசியாக நடித்து வந்ததால், அஜித்தின் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். ஆனால் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், தற்போது வரை அந்த படத்தை மிஸ் செய்ததை நினைத்து ஃபீல் செய்து வருகிறாராம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த தகவலை சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார். 2000-ஆம் ஆண்டு, இயக்குனர் சரவணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகிய நிலையில், தற்போது 23 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் சில மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.