Ethirneechal: அப்போ குணசேகரன் இனி ஒப்புக்கு சப்பாணியா? இயக்குனரை வில்லனாக இறக்கிய இயக்குனர் திருச்செல்லாம்!
'எதிர்நீச்சல்' சீரியலில் புதிய வில்லனை சைலெண்டாக இறக்கி, இயக்குனர் திருச்செல்லாம் முதல் நாளிலேயே மாஸ் காட்ட செய்துள்ளார். எனவே குணசேகரன் இனி ஒப்புக்கு சப்பாணியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மாரிமுத்துவின், எதிர்பாராத மரணத்திற்கு பின்னர் 'எதிர்நீச்சல்' கதைக்களத்தில் ஏகப்பட்ட மாற்றங்களை புகுத்தி, ரசிகர்களுக்கு போர் அடிக்காத வண்ணம்.. விறுவிறுப்பாக எடுத்து செல்கிறார் இயக்குனர் திருச்செல்வம். திடீர் என குணசேகரன் கதாபாத்திரம் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக கதைக்களம் சென்ற நிலையில், இதை தொடர்ந்து மறைந்த நடிகர் மாரிமுத்து ஏற்று நடித்த குணசேகரன் கதாபாத்திரத்தில், பிரபல நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்தார்.
இவர் குணசேகரன் கதாபாத்திரத்தில் எப்படி நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு, ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்களிடமும் சற்று அதிகமாகவே இருந்த நிலையில், பின்னர் இவர் நடிப்பு சில விமர்சனங்களுக்கும் ஆளானது.
வேல ராம மூர்த்தி ஏற்கனவே சில கண்டிஷன்களுடன் தான் இந்த சீரியலில் நடிக்க கமிட் ஆனார். எனவே அவரை சீரியல் குழு கட்டுப்படுத்த முடியாது. எனவே தான் தற்போது பாரிஸில் இவர் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதால்... அங்கு சென்றுள்ளார். இவரின் காட்சிகளும் ஜெயிலில் இருப்பது போல் சீரியலில் காட்டப்பட்டு வருகிறது.
ஏற்கனவே பல பிரச்சனைகளுக்கு நடுவே, சிக்கி இருந்த ஜனனி மற்றும் சக்தி இருவரும், ஒரு வழியாக பிரச்சனைகள் தீர்ந்து, மீண்டும் வாழ துவங்கியது மட்டும் இன்றி, புதிய தொழில் தொடங்கவும் முடிவெடுத்து அதற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால் அதற்க்கு ஆப்பு வைப்பதற்காகவே புதிய வில்லனை இறக்கி விட்டு அழகு பார்த்துள்ளார் இயக்குனர் திருச்செல்வம்.
மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவராக, திமிர் கொண்ட முதலாளி தொனியில் மிரட்டலை கூட சாந்தமாக பேசி, ரசிகர்களை கவர்ந்துள்ளார் கிருஷ்ணா மெய்யப்பன், கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆர்.ஜே.நெல்லு. முதல் நாளே இவருடைய மாஸ் என்றியும், டயலாக் டெலிவரியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புபெற்றுள்ளது. இந்த சைலன்ட் வில்லனால் எதிர்நீச்சல் தொடரில் கண்டிப்பாக பல மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணா கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்துள்ள ஆர் ஜே நெலு, நடிகர் என்பதை தாண்டி இயக்குனரும் ஆவார். இலங்கை மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த இவர், அங்குள்ள சக்தி டிவியில் ஒரு தொகுப்பாளராக தன்னுடைய பணியை துவங்கி, பின்னர் ஜிபிஎஸ், கடலாய் காதல் போன்ற சில படங்களில் முக்கிய ரோல்களில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் யங் வில்லனாக... நெத்தியில் பட்டை, கழுத்தில் கொட்டையோடு என்ட்ரி கொடுத்துள்ளார்.
இவரின் நடிப்பை பார்த்து நெட்டிசங்கள்... இவர் புதிய குணசேகரனையே ஒப்புக்கு சப்பாணியாக்கி விடுவார் போல என்றும், சைலெண்டாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருவதாகவும் கூறி வருகிறார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D