- Home
- Gallery
- அந்த குழந்தை யார் தெரியுமா? ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்ய இது தான் காரணம்! மனம் திறந்த சங்கீதா!
அந்த குழந்தை யார் தெரியுமா? ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்ய இது தான் காரணம்! மனம் திறந்த சங்கீதா!
நடிகர் ரெடின் கிங்ஸ்லி, பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், சமூக வலைத்தளத்தில் பரவிய பல்வேறு விமர்சனங்களுக்கு சங்கீதா தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

redin kingsley
தமிழ் சினிமாவில், தனித்துவமான பாடி லாங்குவேஜ் மூலம் மிக குறுகிய காலத்தில் பிரபலமானவர் ரெடின் கிங்கிலி. 47 வயதாகும் இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த புகைப்படம் வெளியானபோது, இது ஷூட்டிங் திருமணம் என்றே பலரும் நினைத்த நிலையில் பின்னரே, இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்ததும், பின்னர் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
இது நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு முதல் திருமணம் என்றாலும் சங்கீதாவுக்கு இரண்டாவது திருமணம் ஆகும். சங்கீதாவுக்கு ஏற்கனவே கிருஷ் என்பவருடன் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். சங்கீதாவுக்கு ஷிவியா என்கிற மகள் ஒருவரும் உள்ளார்.
Meena: 47 வயதிலும் 25 வயது லுக்... ப்ளூ லகூன் ஐஸ்லாந்தில் வெகேஷன் சென்று வெளியிட்ட முத்த புகைப்படம்!
விவாகரத்துக்கு பின்னர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து கொண்டு, சினிமா மற்றும் சீரியலில் கவனம் செலுத்திய சங்கீதாவுக்கு ரெடின் கிங்கிலியுடன் உண்டான நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. இரண்டு வருடங்களுக்கு பின்னரே ரெடின் கிங்ஸ்லி காதலுக்கு சங்கீதா ஓகே சொன்னார். பின்னர் எளிமையான முறையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில்... மைசூரில் உள்ள கோவிலில் இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது.
இதில் இருவரின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் சங்கீதா தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்தார். அதில் முக்கியமான ஒன்று இருவரின் வயது. அதே போல் ரெடின் கிங்ஸ்லியின் பணத்துக்காகவே.. சங்கீதா அவரை திருமணம் செய்து கொண்டார் என பல தகவல்கள் வெளியானது.
Sangeetha Redin
இந்நிலையில், அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில்... இப்படி எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சங்கீதா. சங்கீதாவின் மகள் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியானது குறித்து எழுபட்ட கேள்விக்கு, பலமுறை நான் கூறி விட்டேன். அது என்னுடைய குழந்தை இல்லை என்று. அது என்னுடைய சகோதரியின் குழந்தை என தெரிவித்துள்ளார்.
redin kingsley
லேட் மேரேஜ், பற்றிய கேள்வி முன்வைக்கப்பட்டபோது... "இந்த வயசுல கல்யாணம் தேவையா என்று பல கமெண்ட்ஸ்கள் வரும். மனதளவில் எனக்கு 18 வயது தான். அவருக்கு 22 வயது. நாங்கள் அப்படி தான் பேசி கொள்வோம். இங்குள்ள மக்களால் இதனை புரிந்து கொள்ள முடிவதில்லை. இதற்காகவே இருவரும் வெளிநாடு போய் செட்டில் ஆகி விடலாமா என்று கூட தோன்றும் என தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
ரூ.3000 கோடிக்கு அதிபதியாக இருக்கும் நடிகருடன் டேட்டிங் செய்யும்... மணிரத்னம் பட ஹீரோயினா இது?
அதே போல் பணத்துக்காக ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்ததாக சொல்வது குறித்து பேசிய சங்கீதா, நானும் ஒன்னும் இல்லாமல் இருப்பவள் இல்லை. இதற்கு எல்லாம் விளக்கமே கொடுத்துட்டு இருக்க முடியாது. அவரிடம் என்னை கவர்ந்த விஷயம் என்றால் அது அவரின் அரவணைப்பு குணம் தான். இது தான் நான் அவரை திருமணம் செய்துகொள்ள காரணம் என கூறியுள்ளார்.