ஒர்க் முக்கியம் பிகிலு.. பக்கவா முடிந்த லியோ பட வெற்றி விழா - தளபதி 68 பணிக்காக வெளிநாடு புறப்பட்ட விஜய்!
Thalapathy Vijay Thailand : தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி வரும் திரைப்படம் தான் லியோ. கடந்த நவம்பர் 1ம் தேதி இந்த திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Thalapathy vijay
லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஜய் அவர்கள் பல சுவாரசியமான விஷயங்களை குறித்து பேசினார். அதிலும் குறிப்பாக அவருடைய அரசியல் வருகை குறித்தான பல விஷயங்கள் இந்த வெற்றி விழாவில் பேசப்பட்டது அனைவரும் அறிந்ததே.
Vijay
அதுமட்டுமில்லாமல் பல ஆண்டு காலமாக சர்ச்சையாக இருந்து வரும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கின்ற கேள்விகளுக்கும், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான் என்று பதில் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தளபதி விஜய். இந்நிலையில் தனது அடுத்த பட பணிகளை அவர் மீண்டும் துவங்கியுள்ளார்.
Venkat Prabhu
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய திரைப்படத்தில் தற்பொழுது தளபதி விஜய் அவர்கள் நடித்த வருகிறார். இது அவருடைய 68வது திரைப்படம் என்பது நாம் அறிந்ததே. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து ஒரு பாடலும், சண்டைக் காட்சியும் படமாக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன.
புஸ்ஸி ஆனந்துக்கு உடல்நலக்குறைவு... நள்ளிரவே மருத்துவமனைக்கு விரைந்த நடிகர் விஜய்..!
Thalapathy 68 Update
ஏற்கனவே வெங்கட் பிரபு மற்றும் பிற பட குழுவினர் தாய்லாந்து சென்றுள்ள நிலையில், இன்று தளபதி விஜய் அவர்களும் தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு தளபதி 68 படத்திற்கான படப்பிடிப்புகள் நடத்தப்பட உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D