MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Thalaivar 170: அதிரடி ஆரம்பம்! அண்ணாமலை கெட்டப்பில் ரஜினிகாந்த்..! துவங்கியது 'தலைவர் 170' படப்பிடிப்பு!

Thalaivar 170: அதிரடி ஆரம்பம்! அண்ணாமலை கெட்டப்பில் ரஜினிகாந்த்..! துவங்கியது 'தலைவர் 170' படப்பிடிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகிவிட்டதாக, புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Oct 04 2023, 12:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thalaivar 170 Shooting Started

Thalaivar 170 Shooting Started

'ஜெயிலர்' படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, தற்போது ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். தற்காலிகமாக 'தலைவர் 170' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின், ப்ரீ புரோடக்ஷன் பணிகள், கடந்த ஒரு மாதமாகவே முழு வீச்சில் நடந்து வந்த நிலையில், இன்று முதல் படப்பிடிப்பு துவங்கி உள்ளது.
 

24
Annamalai movie getup

Annamalai movie getup

இதில் கலந்து கொள்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றார். இதைத்தொடர்ந்து, இன்று முதல் படபிடிப்பு ஆரம்பமாகி உள்ளதாக லைக்கா நிறுவனம் ரஜினிகாந்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரில் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட அண்ணாமலை படத்தில் வயதான ரஜினிகாந்த் எப்படி இருப்பாரோ அதே கெட்டப்பில் உள்ளார். இதுதான் ரஜினிகாந்தின் இந்த படத்திற்கான லுக்கா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவதையும் பார்க்க முடிகிறது.

Prasanth Net Worth: நடிக்காமலேயே மாதம் தோறும் கோடிகளில் வருமானம்! பிரசாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
 

34
Thalaivar 170 cast:

Thalaivar 170 cast:

மேலும் கடந்த இரண்டு நாட்களாக, தலைவர் 170 படத்தில் நடிக்க உள்ள முக்கிய நடிகர் - நடிகைகள் பற்றிய அறிவிப்பு வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ஆகிய மூன்று நாயகிகள் நடக்கின்றனர். இவர்களில் மஞ்சு வாரியர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ராணா டகுபதி, அமிதாபச்சன், பகத் பாசில் ஆகியோரும்  இந்த படத்தில் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

44
Thalaivar 170 Poster:

Thalaivar 170 Poster:

சூர்யாவை வைத்து 'ஜெய்பீம்' படத்தை இயக்கி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், வெற்றி பெற்ற இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், உண்மை கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் போலி என்கவுண்டருக்கு எதிராக போராடும் போலீஸ் அதிகாரியை பற்றிய கதை என ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என நேற்று செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் கூறியுள்ளதால்.. இன்னும் ஓரிரு வாரத்தில், தலைப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செம்ம கியூட்... இரண்டாவது குழந்தை பிறந்த தகவலை புகைப்படத்துடன் கூறிய கணேஷ் வெங்கட்ராம்! குவியும் வாழ்த்து!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved