தலயுடன் திரிஷா.. அஜர்பைஜான் சென்ற விடாமுயற்சி படக்குழு - இனி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்! வைரல் பிக்ஸ்!
தல அஜித் அவர்கள் நடிப்பில் புதிதாக உருவாகவுள்ள விடாமுயற்சி திரைப்பட பணிகள் நாளை அக்டோபர் 4ம் தேதி முதல் துவங்கவுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதற்காக அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
Magizh Thirumeni
தல அஜித் நடிப்பில் உருவாக காத்திருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி, பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கவுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால் தலைப்பு வெளியானதோடு இந்த படம் குறித்த தகவல்கள் அதன் பிறகு எதுவும் வெளியாகவில்லை.
Chinmayi: இரண்டு குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய பிரபல பாடகி சின்மயி! குடி போதையால் நடந்த விபரீதம்.!
vidaamuyarchi
இதனையடுத்து அஜித் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்த நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நாளை அக்டோபர் 4ம் தேதி அஜர்பைஜான் நாட்டில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தல அஜித், நாயகி திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Sanjay Dutt
தொடர்ச்சியாக 3 மாதங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு அங்கு நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கவுள்ளார். விரைவில் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.