MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Chinmayi: இரண்டு குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய பிரபல பாடகி சின்மயி! குடி போதையால் நடந்த விபரீதம்.!

Chinmayi: இரண்டு குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய பிரபல பாடகி சின்மயி! குடி போதையால் நடந்த விபரீதம்.!

பிரபல பாடகி சின்மயி தன்னுடைய குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கியதாக பரபரப்பு பதிவு ஒன்றை போட்டுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Oct 03 2023, 05:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Chinmayi First Song

Chinmayi First Song

தென்னிந்திய ரசிகர்களை, தன்னுடைய இனிமையான குரலால் வசீகரித்தவர் பிரபல பாடகி சின்மயி. 2002 ஆம் ஆண்டு, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கன்னத்தின் முத்தமிட்டாள்' படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இவர் பாடிய, சிறு தெய்வம் தந்த பூவே பாடல், சின்மயியை பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைய செய்தது.

 

25
Dubbing Artist:

Dubbing Artist:

இதை தொடர்ந்து, தற்போது சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில்... பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். பாடகி என்பதை தாண்டி, பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார் சின்மயி.

விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் நடித்துள்ள 'மேரி கிறிஸ்மஸ்' ரிலீஸில் திடீர் மாற்றம்! எதிர்பாராத அப்டேட்!

35
Chinmayi - Rahul Marriage:

Chinmayi - Rahul Marriage:

சுமார் 20 வருடங்களுக்கு மேலாக, தன்னுடைய இதமான குரலால் ரசிகர்களை கவர்ந்துள்ள சின்மயி... கடந்த 2014-ஆம் ஆண்டு பிரபல நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை காதலித்து கரம்பிடித்தார். இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் இரட்டை குழந்தைகள் பிறந்தது. அவ்வப்போது தன்னுடைய குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதையும் சின்மயி வழக்கமாக வைத்துள்ளார்.

45
Chinmayi Me-too Complaint:

Chinmayi Me-too Complaint:

அதே போல் சமூக அவலங்களுக்கு எதிராக, தன்னுடைய சமூக வலைத்தளம் மூலம் குரல் கொடுத்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர், கவிஞர் வைரமுத்து மீது... மீடூ புகார் கொடுத்து, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய பெருமையும் சின்மயியை சேரும். இவரை தொடர்ந்து பல நடிகைகள் மட்டும் அல்லது பெண்கள் சிலரும் தங்களுக்கு பல்வேறு இடங்களிலும், அலுவலகங்களிலும் அரங்கேறும் பாலியல் புகார்களை வெளிப்படையாக கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Kushboo: விஷ்ணுமாயா கோவிலில் நடிகை குஷ்பூவுக்கு வழங்கப்பட்ட மரியாதை! 'தெய்வமே அழைத்துள்ளது' உருக்கமான பதிவு!
 

55
Chinmayi met Accident:

Chinmayi met Accident:

இதை தொடர்ந்து தற்போது சின்மயி, விபத்தில் சிக்கிய தகவலை சமூக வலைத்தளத்தில் கூற, ரசிகர்களுடன் தொடர்ந்து அக்கறையோடு நலம் விசாரித்து வருகிறார்கள். சின்மயி தன்னுடைய இரட்டை குழந்தைகள், மற்றும் குடும்பத்தினருடன், காரில் சென்றபோது... குடிபோதையில் எதிரே வந்த ஆட்டோ ஓட்டுநர், சின்மயி வந்த காரில் இடித்துள்ளார். பின்னர் வண்டியை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த பதிவை போட்டு, கொந்தளித்துள்ள சின்மயி அதிஷ்டவசமாக தனக்கும், தன்னுடைய குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் யாருக்கும் எதுவும் ஆகவில்லை என கூறியுள்ளார்.  
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved