Kushboo: விஷ்ணுமாயா கோவிலில் நடிகை குஷ்பூவுக்கு வழங்கப்பட்ட மரியாதை! 'தெய்வமே அழைத்துள்ளது' உருக்கமான பதிவு!
நடிகை குஷ்பூவுக்கு கேரள மாநிலத்தில் உள்ள, விஷ்ணு மாயா கோவிலில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மிகவும் உருக்கமாக பதிவிட்டு... அதன் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Actress Kushboo
தென்னிந்திய திரையுலகில் 80-பது மற்றும் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. பல ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய இவருக்கு, ரசிகர்கள் கோவில் கட்டி கொண்டாடினார்கள். பிறப்பால் ஒரு இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராக குஷ்பூ இருந்தாலும், பின்னர் இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டு, தமிழ் நாட்டு மருமகளாக மாறினார்.
Actress, Producer and Politician Kushboo
இந்து சமூகத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்ட பின்னர், அன்று முதல் இன்று வரை இந்துக்களின் கலாச்சாரத்தை கடைபிடித்து வருகிறார். மேலும் குஷ்பூ நடிகை என்பதை தாண்டி, தயாரிப்பாளர், அரசியல்வாதி என்கிற இரண்டு குதிரையில் வெற்றிகரமாக சவாரி செய்து வருகிறார் குஷ்பூ.
இயக்குனர் பாலாவால் ஏமாற்றப்பட்ட மறைந்த இயக்குனர் வி.ஏ.துரை.! கடைசி வரை போராடியும் கிடைக்காத பணம்!
Kushboo invited Naari Pooja
இந்த நிலையில் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவிலில் சமீபத்தில் நடந்த நாரி பூஜைக்கு குஷ்பூவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த பூஜையில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, "நான் இந்த பூஜை அழைக்கப்பட்டதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன் என்றும், அந்த தெய்வமே என்னை தேர்ந்தெடுத்ததாக நம்புவதாகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்".
Kushboo Viral post:
ஒரு வருடத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த நாரி பூஜையில் கலந்து கொள்ள அனுமதி கிடைக்கும் இந்த முறை குஷ்பூ தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு பெருமையை எனக்கு வழங்கிய கோவிலில் உள்ள அனைவருக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்வதாக குஷ்பூ பதிவிட்டுள்ளார். இதுகுறித்த சில புகைப்படங்களை குஷ்பூ தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட, அவை வைரலாக பார்க்கப்பட்டு... வாழ்த்துக்களையும் குவித்து வருகிறது.