குரங்கு அம்மை நோய்.! அலர்ட் செய்யும் தமிழக அரசு.! அறிகுறிகள் என்ன.?
உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருவதால், தமிழ்நாடு சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நோயின் அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அச்சுறுத்தும் குரங்கு அம்மை
கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்களை உயிர் பழி வாங்கியது. இந்த நோய் தொற்றால் உலகமே முடங்கியது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வீடுகளுக்குள் மக்கள் முடங்கினர். தற்போது தான் அந்த பாதிப்பில் இருந்து மக்கள் வெளியே வந்து இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில் மீண்டும் அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய் ஆகும். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது.
100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய நோய்
எம்பாக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலில் ஆப்ரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட பாதிப்பு மெல்ல மெல்ல 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கியது. ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்த நிலையில், அதிகரித்துவரும் குரங்கு அம்மை நோய் பாதிப்பால், உலகளாவிய சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
அறிகுறிகள் என்ன.?
இந்த குரங்கு அம்மை நோய் அதிகரிப்பு காரணமாக தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதன் படி, இந்த தொற்றின் முக்கிய அறிகுறி தோல் அரிப்பு, சீழ் வழிதல். ஒரு வாரத்திற்கு மேல் காய்ச்சல், தலைவலி, சோர்வு அடைதல், தசை வலி, முதுகு வலி, நிணநீர் கணுக்கள் வீக்கம் அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்களே தினமும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.. அப்புறம் நடக்கறதை மட்டும் பாருங்க!
குரங்கு அம்மை நோய் பரிசோதனை எப்படி.?
குரங்கை அம்மை நோயால் ஏற்படும் தோல் புண்களை PCR மூலம் சோதித்து இந்த நோய் உறுதி செய்யப்படுகிறது. தற்காப்பு வழிமுறையை பொறுத்தவரை குரங்கு அம்மை நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள பாதிக்கபட்டவருடன் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும். தடுப்பூசி மூலமாகவும் இதன் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்பட் வாய்ப்பு.?
மேலும் கடந்த 21 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்த திரும்பிய எந்த வயதினராக இருந்தாலும் மேல் கூறிய அறிகுறி இருந்தால் அவருக்கு mpox தொற்று ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களது பகுதியில் இந்த அறிகுறியுடன் யாரேனும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என உறுதி செய்ய வேண்டும்.
காலை தொங்கு போட்டு உட்கார்ந்தால் இத்தனை பிரச்சனைகள் வருமா? ஷாக் ஆகாம படிங்க!!
விமான நிலையங்களில் சோதனை
தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கும் நபரை உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். சென்னை, SPHL மருத்துவமனைக்கு Samples அனுப்பி சோதனை செய்யலாம். விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் பாதிப்பு இருக்கும் நாடுகளில் இருந்து வருபவர்களை மருத்துவ சேவைக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. குறிப்பாக காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுககு சோதனை செய்யவேண்டும் என தமிழக சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.