காலை தொங்கு போட்டு உட்கார்ந்தால் இத்தனை பிரச்சனைகள் வருமா? ஷாக் ஆகாம படிங்க!!
Feet Dangling Causes : கால் அதிக நேரம் தொங்கியபடி இருந்தால் அது உடலுக்கு பல விளைவுகளை உருவாக்கும் தெரியுமா? இதற்கான காரணத்தை இப்போது இங்கு பார்க்கலாம்.
பொதுவாகவே, நாம் தினமும் நம்முடைய காலை தொங்க போட்டு தான் அதிகமாக உட்காருவோம். உதாரணமாக, இரண்டு சக்கர வாகனத்தில் சொல்லும் போது, பஸ்ஸில், ரயிலில், சினிமா தியேட்டரில், பள்ளி கல்லூரிகளில், அலுவலகங்களில், வீட்டில் இருக்கும் போது, சோபா, நாற்காலி, கட்டிலில் உட்காரும் போது என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் யோசித்துப் பாருங்கள் உங்களுடைய கால் அதிக நேரம் தொங்க வைத்தபடி தான் இருக்கும் ஆனால் இப்படி கால் அதிக நேரம் தொங்கியபடி இருந்தால் அது உடலுக்கு பல விளைவுகளை உருவாக்கும் தெரியுமா? இதற்கான காரணத்தை இப்போது இங்கு பார்க்கலாம்.
காரணங்கள்:
நாம் உட்காரும்போது காலை தொங்க போட்டு உட்கார கூடாது என்று ஏன் சொல்கிறார்கள் என்றால், நம் உடலில் ரத்த ஓட்டம் இடுப்பிற்கு கீழ் பகுதியில் மட்டுமே அதிகமாக செல்லும். அதுவே நாம் காலை மடக்கி சம்மனம் போட்டு உட்கார்ந்தால் இடுப்புக்கு மேலையும் ரத்த ஓட்டம் அதிகமாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாம்.
அதுமட்டுமின்றி நம் உடல் உறுப்புகளில் சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் தான் உள்ளது. எனவே, காலை தொங்கப் போடாமல் சம்மணங்கால் போட்டு உட்கார்ந்தால், உடலுக்கு தேவையான முழு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கும். இதற்காக தான் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சாப்பிடும் போது தரையில் அமர்ந்து சமணம் விட்டு சாப்பிட வேண்டும் என்று நம்மிடம் அடிக்கடி சொல்வார்கள். அதுமட்டுமின்றி, நாம் சம்மணம் போட்டு உட்கார்ந்து சாப்பிட்டால் ரத்த ஓட்டம் இடுப்புக்கு கீழே செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்கு செல்வதால் சாப்பிடும் உணவு நன்றாக ஜீரணமாகும். ஆனால், பலர் டைனிங் டேபிளில் அல்லது நாற்காலியில் காலை தொங்கை போட்டு உட்கார்ந்து சாப்பிடும் போது ரத்த ஓட்டம் வயிற்று பகுதிக்கு செல்லாமல் முழுவதும் காலுக்கே செல்லும்.
இன்னும் சொல்லப் போனால், இந்தியன் டாய்லெட்டில் தான் காலை மடக்கி வைக்கிறோம். டாய்லெட் பயன்படுத்தும்போது, குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே, வயிற்றில் இருக்கும் கழிவுகள் வெளியேறும். மேலும்,வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தியவர்களால் இந்தியன் டாய்லெட் பயன்படுத்தும்போது கடினமாக உணர்கிறார்கள். உங்களால் தரையில் அமர்ந்து சம்மணம் போட்டு உட்கார முடியவில்லை என்றால் நீங்கள் உங்களது உடலை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆகையால் உங்களால் முடிந்தவரை கண்டிப்பாக காலை தொங்க போட்டு உட்காருவதை தவிர்க்கவும்.
இதையும் படிங்க: உட்கார்ந்திருக்கும் போது கால் ஆட்டும் பழக்கம் உள்ளவரா? உடனே நிறுத்துங்க.. இல்லைன்னா அவ்வளவுதான்..!
இவற்றைப் பின்பற்றவும்:
- நீங்கள் எப்போதும் வெஸ்டர்ன் டாய்லெட்டுக்கு பதிலாக இந்தியன் டாய்லெட் பயன்படுத்துங்கள்.
- கட்டிலில், ஷோபாவில் உட்காரும்போது சம்மணம் போட்டு உட்காருங்கள்.
- முக்கியமாக சாப்பிடும்போது தரையில் பாய் விரித்து அதன் மேல் சம்மணம் போட்டு உட்கார்ந்து சாப்பிட்டால் உணவு விரைவில் ஜீரணமாகும்.
- டைனிங் டேபிளில் கூட நீங்கள் காலை மடக்க வைத்து சாப்பிடலாம்.
இதையும் படிங்க: நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் கால்கள் வீங்குகிறதா? இதெல்லாம் தான் காரணங்கள்..
சாப்பிடும் முறைகள்:
- நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை விட்டு விடுங்கள் எப்போதும் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள்.
- எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் சரி, அதை நன்றாக மென்று, கூழாக்கி தான் சாப்பிட வேண்டும். ஒரு போதும் அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்.
- சாப்பிடும்போது போன் பேசுவது டிவி பார்ப்பது புத்தகம் படிப்பது போன்ற பழக்கம் இருந்தால் உடனே அவற்றை நிறுத்துங்கள்.
- அதுபோல சாப்பிடும்போது இடையில் தண்ணீர் குடிக்க கூடாது. மேலும் கடைசியில் தண்ணீர் குடிக்கவும் மறக்காதீர்கள். அதுவும் போதிய அளவில் மட்டுமே.
- உங்களுக்கு பிடிக்காத உணவு ஒருபோதும் கஷ்டப்பட்டு சாப்பிட வேண்டாம். அதுபோல பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்.
- ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.
- இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை போன்ற உணவுகளை ஒருபோதும் சாப்பிட வேண்டாம்.
- நீங்கள் சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடலாம். ஆனால், அதன் பிறகு பழங்களை சாப்பிடக்கூடாது.
- நீங்கள் சாப்பிடுவதற்கு முன் சிறிது நேரம் நடந்து விட்டு பிறகு சாப்பிடுங்கள் அதுபோல இரவு உணவுக்கு பின் சிறிது நேரம் நடப்பது நல்லது.
- உணவு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்துத் தான் தூங்க வேண்டும்.
- இவை எல்லாவற்றையும் விட, சாப்பிடுவதற்கு முன் இறைவனுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்.
சாப்பிட வேண்டிய சரியான நேரம்:
காலை - 7 - 9 மணிக்குள்
மதியம் - 12 - 2 மணிக்குள்
இரவு - 6 - 8 மணிக்குள்
எனவே நீங்கள் சரியான முறையில் சாப்பிட்டால் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.