ஆண்களே தினமும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.. அப்புறம் நடக்கறதை மட்டும் பாருங்க!
பூண்டு, வீட்டு சமையலறைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப்பொருள். இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், ஆண்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.
Garlic
அனைவரது வீட்டு சமையலறையிலும் பூண்டு இருக்கும். இதை உணவில் சேர்த்து கொள்வதால் பல நன்மைகள். அதிலும் குறிப்பாக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. இதை ஆண்கள் சாப்பிடுவதால் பல அற்புத பலன்கள் கிடைக்கின்றன.
Garlic Benefits
பூண்டு பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்தவை. இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, மாங்கனீசு, செலீனியம் ஆகியவை உள்ளன. பூண்டு உடலில் ரத்த ஓட்டத்தை கட்டுக்குள் வைப்பதாலும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாலும் இதய நோய்களை கட்டுப்படுத்துகிறது. பூண்டு தினமும் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.
இதையும் படிங்க: Belly Fat: தொப்பை இருந்தா இவ்வளவு டேன்ஜரா? என்னென்ன நோய்கள் வரும் தெரியுமா?
Garlic Health Benefits
பூண்டு உண்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கமுடியும். உணவுக்குழாய், வயிறு, பெருங்குடல் புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் குறைப்பதில் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், பெருங்குடல், வயிறு, கணையம், மற்றும் மார்பகப் புற்றுநோய்களைத் தடுக்க உதவுகின்றன. முகப்பரு குறைக்க, சருமத்தை தெளிவாகவும், பொளிவாகவும் வைத்திருக்க உதவுகிறது. தினமும் பூண்டு சாப்பிடும் போது கெட்ட கொலஸ்ட்ரால் குறைகிறது. அடிக்கடி ஏற்படும் இருமல், சளி ஆகியவற்றை பூண்டு குணமாக்கும்.
இதையும் படிங்க: இந்த பறவைகள் வீட்டுக்கு வந்தால் நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? அதிஷ்டத்தை அள்ளி கொடுக்குமா?
Benefits of Eating Garlic For Men
தினமும் பூண்டு சாப்பிடுவதால் ஆண்களுடைய பாலுணர்வு அதிகரிக்கும். ஆண்களின் விந்தணுக்களின் தரமும், எண்ணிக்கையும் உயரும். சில ஆண்களுக்கு பாலுணர்வு தூண்டப்படுவதில் இருக்கும் சிக்கல்கள் பூண்டு நல்ல ஒரு தீர்வை கொடுக்கும்.