Actor Karthi : மீணடும் ஒரு Gangster படமா? பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் கார்த்தி - வெளியான தகவல் உண்மைதானா?
Actor Karthi New Movie : ஜப்பான் திரைப்படம் பெரிய அளவில் வெற்றியடையாத நிலையில் தற்பொழுது மெய்யழகன் மற்றும் வா வாத்தியார் என்கின்ற இரு திரைப்படங்களில் பிஸியாக நடித்திருக்கிறார் கார்த்தி.
Ayutha Ezhuthu
தமிழ் திரையுலகில் மணிரத்தினம் அவர்களுடைய உதவி இயக்குனராக பணியாற்றி, கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான "ஆயுத எழுத்து" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக கலை உலகில் அறிமுகமானவர் தான் கார்த்தி.
Actor Vijay: தமிழக வெற்றி கழகத்தின் முதல் பிரமாண்ட மாநாடு; இடத்தை தேர்வு செய்யும் தளபதியின் படைகள்
paruthiveeran
அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் என்கின்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான கார்த்திக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்ததற்காக மூன்று சிறந்த விருதுகளும் அவருக்கு கிடைத்தது.
Aayirathil Oruvan
தொடர்ச்சியாக அவர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மற்றும் சகுனி உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக மாறிய நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் கார்த்தியின் மதிப்பை வேறு ஒரு தரத்திற்கு கொண்டு சென்றது.
Director Tamil
ஏற்கனவே 4க்கும் மேற்பட்ட படங்களில் நடிக ஒப்பந்தமாகியுள்ள கார்த்தி, டானாகரன் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான நடிகர் மற்றும் இயக்குனரான தமிழ் இயக்கத்தில் புதிதாக ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.