MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஒய் திஸ் கொலவெறி பாஸ்... புத்தாண்டுக்கு போட்டி போட்டு பிளாப் படங்களை ஒளிபரப்பும் டிவி சேனல்கள்...!

ஒய் திஸ் கொலவெறி பாஸ்... புத்தாண்டுக்கு போட்டி போட்டு பிளாப் படங்களை ஒளிபரப்பும் டிவி சேனல்கள்...!

புத்தாண்டு விடுமுறைக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவி, கலர்ஸ் தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாக உள்ள சிறப்பு திரைப்படங்களைப் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Dec 31 2023, 01:21 PM IST| Updated : Dec 31 2023, 01:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
New year special movies

New year special movies

புத்தாண்டு என்றாலே தொலைக்காட்சிகளில் புதுப்படங்களுக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் இந்த ஆண்டு புத்தாண்டுக்கு தமிழ் தொலைக்காட்சிகளான விஜய் டிவி, சன் டிவி, கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ், கலைஞர் டிவி ஆகியவை போட்டிபோட்டு பிளாப் படங்களை ஒளிபரப்ப உள்ளன. தியேட்டரில் ரிலீசாகி அட்டர் பிளாப் ஆன படங்களாக தேர்வு செய்து இந்த ஆண்டு புத்தாண்டுக்கு ஒட்டுமொத்தமாக களமிறக்க உள்ளனர். அதன் பட்டியலை பார்க்கலாம்.

25

சன் டிவி

சன் டிவியில் புத்தாண்டு ஸ்பெஷலாக ஒளிபரப்பாக உள்ள திரைப்படம் சந்திரமுகி 2. 2023-ம் ஆண்டின் மிகப்பெரிய பிளாப் படங்களில் அதுவும் ஒன்று, அப்படத்தை தற்போது முதன்முறையாக புத்தாண்டுக்கு டிவியில் ஒளிபரப்புகிறது சன் டிவி. அத்துடன் ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட சூர்யாவின் சிங்கம் மற்றும் ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை ஆகிய திரைப்படங்களும் புத்தாண்டன்று ஒளிபரப்பப்பட உள்ளன.

35

விஜய் டிவி

விஜய் டிவியில் புத்தாண்டுக்காக இரண்டு புதுப்படங்களை முதன்முறையாக ஒளிபரப்ப உள்ளனர். அதன்படி புத்தாண்டுக்கு முந்தைய தினமான இன்று துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி தோல்வியை சந்தித்த கிங் ஆஃப் கொத்தா திரைப்படமும், நாளை சந்தானம் நடிப்பில் வெளியாகி படுதோல்வியை சந்தித்த கிக் திரைப்படமும் புத்தாண்டு ஸ்பெஷலாக ஒளிபரப்பப்பட உள்ளன.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

45

ஜீ தமிழ்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புத்தாண்டு ஸ்பெஷலாக காஜல் அகர்வால், யோகிபாபு நடித்த கோஸ்டி திரைப்படம் முதன்முறையாக ஒளிபரப்பப்பட உள்ளது. 2023-ல் வெளிவந்த பிளாப் படங்களில் இதுவும் ஒன்று. இதுதவிர சந்தானத்தின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான டிடி ரிட்டன்ஸ் திரைப்படமும் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

55

கலைஞர் டிவி மற்றும் கலர்ஸ் தமிழ்

கலைஞர் டிவியில் புத்தாண்டு தினத்தன்று பீட்சா 3 தி மம்மி திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது. இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது. அதேபோல் கலர்ஸ் தமிழில் boo என்கிற திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இதில் நிவேதா பெத்துராஜ், ரகுல் ப்ரீத் சிங், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இதுவும் ஒரு தோல்வி படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நேரம் குறிச்சாச்சு.. தரமான அப்டேட் உடன் வெங்கட் பிரபு கொடுத்த ஹின்ட்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved