- Home
- Gallery
- எளிமையாக நடந்த ஸ்ரித்திகா - ஆரியன் இரண்டாவது திருமணம்! பிரமாண்டமாக நடந்த வெட்டிங் ரிசப்ஷன்! போட்டோஸ்
எளிமையாக நடந்த ஸ்ரித்திகா - ஆரியன் இரண்டாவது திருமணம்! பிரமாண்டமாக நடந்த வெட்டிங் ரிசப்ஷன்! போட்டோஸ்
சீரியல் நடிகை ஸ்ரித்திகா, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் எளிமையாக தன்னுடைய இரண்டாவது திருமணம் நடந்து முடிந்ததாக அறிவித்த நிலையில், இவரது வெட்டிங் ரிசப்ஷன் பிரமாண்டமாக நடந்துள்ளது. இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.

மலேசியாவை சேர்ந்த நடிகை ஸ்ரித்திகா, மாடலாக இருந்து பின்னர் சீரியல் நடிகையாக மாறியவர். சன் டிவியில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'கலசம்' சீரியலில் அறிமுகமான இவர், பின்னர் கோகுலத்தில் சீதை, நாதஸ்வரம், மாமியார் தேவை, உறவுகள் சங்கமம், வைதேகி, உரிமை, குலதெய்வம், மகராசி, உள்ளிட்ட 10-திற்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
இதைத் தவிர மகேஷ் சரண்யா மற்றும் பலர், வெண்ணிலா கபடி குழு, மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி, வேங்கை போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சனீஸ் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். திருமணமான இரண்டே வருடத்திற்குள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்தில் முடிந்தது.
கணவரிடம் இருந்து இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், மகாராசி சீரியலில் தன்னுடன் பேராக நடித்து வந்த ஆரியனை ஸ்ரித்திகா காதலித்து வந்தார். அடிக்கடி இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொள்ளும் போட்டோஸ், மற்றும் ரீலிஸ் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருந்தனர்.
இந்நிலையில் தங்களின் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் அண்மையில் மிகவும் எளிமையான முறையில் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துக்கொண்டதாக ஸ்ரித்திகா தன்னுடைய சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையில் கூறியிருந்ததாவது.. ""சில வருடங்களுக்கு முன்பு நானும், ஆர்யனும் எண்களின் திருமண வாழ்க்கையிலிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தோம். இதற்கு நாங்கள் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. இப்போது எங்களுடைய கடந்த வாழ்க்கை பற்றிய எந்த ஒரு எதிர்மறையான விஷயங்களையும் இங்கு பகிர்ந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை. நட்பும் புரிதலும் எங்களுடைய அடுத்தக்கட்ட நகர்விற்கான நம்பிக்கையை கொடுத்துள்ளது. உங்களுடைய சப்போர்ட்டினாலும் எங்களுடைய பெற்றோர்களின் ஆசியாலும் நாங்கள் இருவரும் பதிவு திருமணம் செய்திருக்கிறோம். தொடர்ந்து உங்களுடைய அன்பையும், ஆதரவையும் எங்களுக்குக் கொடுங்கள். சீக்கிரம் இது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்கிறோம் என தெரிவித்திருந்தார்.
தன்னுடைய அறிக்கையில் கூறுகின்றது போல் தற்போது ஸ்ரித்திகா - ஆரியன் திருமண ரிசப்ஷன் போட்டோசை அவர் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இவர்களுடைய வெட்டிங் ரிசப்ஷனில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
'பருத்திவீரன்' படத்தில் சித்தப்பு சரவணன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?