- Home
- Gallery
- Raveena Daha: சூப்பர் ஹிட் சீரீஸின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக கமிட் ஆன ரவீனா தாஹா! வைரலாகும் போட்டோஸ்!
Raveena Daha: சூப்பர் ஹிட் சீரீஸின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக கமிட் ஆன ரவீனா தாஹா! வைரலாகும் போட்டோஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பட வாய்ப்பு கிடைக்கும் என நினைத்த ரவீனா தாஹாவுக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், தற்போது புதிய வெப் சீரீஸ் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் இதுகுறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் சீரியலில் கதாநாயகியாக மாறியவர் ரவீனா தாஹா. இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா, புலி, போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். அதே போல் விஷ்ணு விஷாலின் ராட்சசன் படத்திலும் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இது தவிர, சன் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்களில், குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். சிறு வயதில் இருந்தே டான்ஸ் கற்று வரும் ரவீனா... பல டான்ஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலக்கியவர்.
மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விதவிதமான கவர்ச்சி உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களையும், விதவிதமான ரீல்ஸ்களை வெளியிட்டு பட வாய்ப்பு தேடியவருக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில், அதிரடியாக சின்னத்திரையில் ஹீரோயினாக களமிறங்கினார்.
விஜய் டிவியில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற, மெளன ராகம் சீரியலின் சீசன் 2-வில் சேலை கட்டிய குடும்ப குத்துவிளக்காக நடித்து ரசிகர்களை பிரமிக்க வைத்தார் ரவீனா. பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய இவர், கடந்த சீசனில் ஷிவாங்கி விட்டுச் சென்ற இடத்தை நிரப்பினார். இவர் சொல்லும் கடி ஜோக்குகளுக்கு தனி ரசிகர் கூட்டமே இருந்தது.
'பருத்திவீரன்' படத்தில் சித்தப்பு சரவணன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?
இதையடுத்து யாரும் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவீனா, நடன இயக்குனர் மணி சந்திராவை காதலித்தது அப்பட்டமாக தெரிந்த நிலையில், வெளியே வந்த பின்னர் வழக்கம் போல் இருவரும் பிரிந்தனர். இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
தற்போது ரவீனா, ஆஹா ஓடிடி தளத்தில் விரைவில் துவங்க உள்ள 'வேற மாறி ஆபீஸ் சீசன் 2' வெப் சீரிஸில் லீட் ரோலில் நடக்க உள்ளார். இதற்கான பூஜை போடப்பட்டுள்ள நிலையில், இது குறித்த போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.