45 வயது நடிகையை திருமணம் செய்ய ஆசை பட்ட பிரேம்ஜி! கங்கை அமரன் ஓகே சொன்ன பிறகு... கலைத்து விட்ட பிரபலம்!
நடிகர் பிரேம்ஜி, பிரபல நடிகை ஒருவரை காதலித்து திருமணம் செய்ய நினைத்ததாகவும்... ஏதேதோ சொல்லி ஆட்டையை கலைத்தது பிரபல நடிகர் தான் என பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் எப்போது என கேட்டு வந்தவர்களுக்கு... ஒரு வழியாக தன்னுடைய 45 வயதில் கல்யாண செய்தியை கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டார் பிரேம்ஜி. நடிகராகவும், இசையமைப்பாளராகவும் அறியப்படும் பிரேம்ஜி, ஒரு சில காதல் சர்ச்சைகளில் சிக்கியவர். அதே போல் எப்போதும் பார்ட்டி, பப், என ஜாலியாக இருக்கும் மனிதர். மனதில் பட்டத்தை எந்த ஒரு ஒளிவு மறைவும் இன்றி பேசுவது இவருடைய ஸ்பெஷாலிட்டி என்றே கூறலாம்.
இவரின் தந்தை கங்கை அமரனும் தன்னுடைய பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வயதிற்கு மேல் அதிக சுதந்திரம் கொடுத்து வளர்த்தவர். மேலும் எப்போதுமே தன்னுடைய பிள்ளைகளின் ஆசைக்கு அவர் குறுக்கே நிற்பவர் அல்ல. இன்னும் சொல்லப்போனால் இளையராஜாவிற்கு அப்படியே எதிர்மாறானவர் கங்கை அமரன்.
premgi
தன்னுடைய பிள்ளைகள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களை கூட, அவர்களின் தோலை தட்டிக் கொடுத்து அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்து வந்துள்ளார். பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளாதது, கங்கை அமரனுக்கு மிகப்பெரிய உறுத்தலாகவே இருந்து வந்த நிலையில்.... சமீபத்தில் சேலத்தைச் சேர்ந்த வங்கி ஊழியர் இந்துவை காதலித்து கரம் பிடித்தார் பிரேம்ஜி. இந்த திருமணத்தால் ஒட்டுமொத்த குடும்பமே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
premgi
இந்த நிலையில் பிரேம்ஜியின் முன்னாள் காதலி குறித்த தகவலை பத்திரிகையாளர் பரமேஸ்வரன் என்பவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் அறியப்படும் சோனாவை தான் பிரேம்ஜி காதலித்து வந்ததாகவும், பிரேம்ஜி காதலை சோனாவும் ஏற்று கொண்ட பின்னர்... இதற்கு பிரேம்ஜியின் தந்தை கங்கை அமரன் சம்மதம் கூறி உள்ளார்.
'பருத்திவீரன்' படத்தில் சித்தப்பு சரவணன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?
திருமணம் வரை செல்ல இருந்த இந்த காதல்.. திருமணத்தில் முடியாமல் பிரேக்கப்பில் முடிய காரணம் நடிகர் சிவா தானம். அவர் எதுக்கு திருமணம் எல்லாம் செஞ்சிகிட்டு என ஏதேதோ சொல்லி கொளுத்தி போட இருவருமே திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டார்களாம். பல வருடங்களாக இதே மனநிலையோடு இருவருமே உள்ள நிலையில்... இந்துவின் காதலால் மனம் மாறி பிரேம்ஜி திருமணம் செய்து கொண்டுள்ளார். சோனா இப்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சோனா 'பூவெல்லாம் உன் வாசம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து தமிழில் ஷாஜகான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம்,கன்னடம், போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது பூமர் அங்கிள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஜெய் ஹீரோவாக நடித்த கனிமொழி என்கிற படத்தை சோனா தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.