அட்டர் பிளாப்... பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய ஜப்பான் படத்தால் தயாரிப்பாளருக்கு இத்தனை கோடி நஷ்டமா?
நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த ஜப்பான் திரைப்படம் தோல்வி அடைந்ததால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாம்.
Japan
நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த திரைப்படம் ஜப்பான். இப்படத்தை ராஜு முருகன் இயக்கி இருந்தார். இவர் இதற்கு முன்னர் ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கி உள்ளார். இதில் ஜோக்கர் படம் தேசிய விருது வென்று அசத்தியது. இத்தகைய திறமை வாய்ந்த இயக்குனருடன் கார்த்தி கூட்டணி அமைத்ததால் ஜப்பான் படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது.
japan movie
ஜப்பான் திரைப்படம் ரிலீசான முதல் காட்சியிலேயே படு மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் அடுத்தடுத்த காட்சிகளில் அப்படத்திற்கான கூட்டம் குறையத்தொடங்கின. மறுபுறம் இதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றதால் அப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு வருகிறது. தீபாவளி விடுமுறையால் 4 நாட்கள் ஓரளவு வசூலித்த ஜப்பான் திரைப்படம் 5-வது நாளில் வாஷ் அவுட் ஆனது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Japan karthi
ஜப்பான் படத்தால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் கார்த்தி சோலோ ஹீரோவாக நடித்து வெளிவந்த சர்தார் திரைப்படம் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்திற்கு தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி ஷேர் கிடைத்ததாம். அதனால் ஜப்பான் படத்துக்கு 20 கோடி ஷேராவது கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த தியேட்டர்காரர்களுக்கு 5 கோடி கிடைப்பதே கஷ்டம் என்கிற நிலைமை தான் தற்போது உள்ளதாக கூறப்படுகிறது.
japan movie loss
இதன்மூலம் 15 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது இப்படம். அதுமட்டுமின்றி இப்படத்தின் சாட்டிலைட் உரிமையும் இன்னும் விற்கப்படவில்லையாம். ரிலீசுக்கு முன்னர் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை 15 கோடியாக நிர்ணயம் செய்திருந்தாராம் தயாரிப்பாளர். அந்த தொகைக்கு யாரும் வாங்க முன்வராததால், ரிலீசுக்கு பின்னர் படம் வெற்றியடைந்தால் அதைவிட பெரும் தொகைக்கு விற்றுவிடலாம் என்கிற ஐடியாவில் இருந்தாராம். ஆனால் படத்தில் ரிசல்ட் அப்படியே உல்டா ஆனதால் தற்போது சாட்டிலைட் உரிமையை விற்க முடியாமல் திண்டாடி வருகிறாராம். இதனால் இதன் மூலமும் ஒரு 15 கோடி என மொத்தம் 30 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... தனுஷ், ரஜினி, சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக பொங்கல் ரேஸில் இணைந்த விஜய் சேதுபதியின் பான் இந்தியா படம்