MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Thalapathy Vijay Injured: கோட் ஷூட்டிங்கின்போது விபத்தில் சிக்கிய விஜய்? கையில் காயத்தோடு வந்து வாக்களித்தார்

Thalapathy Vijay Injured: கோட் ஷூட்டிங்கின்போது விபத்தில் சிக்கிய விஜய்? கையில் காயத்தோடு வந்து வாக்களித்தார்

நடிகர் விஜய் ரஷ்யாவில் நடைபெற்று வந்த கோட் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கி கையில் காயமடைந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 19 2024, 01:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். அவர் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி இருக்கிறது. அப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கோட் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.

24

இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக ரஷ்யாவில் இருந்து கிளம்பி வந்துள்ளார் நடிகர் விஜய். ரஷ்யாவில் இருந்து வழக்கமாக துபாய் வந்து அதன்பின்னர் தான் சென்னைக்கு வர முடியும். ஆனால் தற்போது துபாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாஸ்கோ வந்து அங்கிருந்து சென்னைக்கு வந்திருக்கிறார் தளபதி விஜய்.

இதையும் படியுங்கள்... Thalapathy Vijay: 2024 மக்களவை தேர்தலில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார் தளபதி விஜய்! வீடியோ

34

ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதற்காக சுமார் 12 மணிநேரம் விமான பயணம் மேற்கொண்டு சென்னைக்கு வந்துள்ளார் தளபதி விஜய். இன்று காலை சென்னை வந்த அவர், வீட்டுக்கு வந்த உடன் வாக்களிக்க கிளம்பிவிட்டார். கடந்த முறை தேர்தலின் போது சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய், இம்முறை காரில் ரசிகர்கள் புடைசூழ வந்து வாக்களித்தார். நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் பள்ளியில் விஜய் வாக்களிக்க வந்தபோது அங்குள்ள ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

44

இதையடுத்து அங்கிருந்த போலீசார் கூட்டத்தை அப்புறப்படுத்தி நடிகர் விஜய்யை பத்திரமாக வாக்களிக்க அழைத்து சென்றனர். நடிகர் விஜய் வாக்களிக்க வந்தபோது அவரது கையில் காயம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள தகவலின் படி நடிகர் விஜய் ரஷ்யாவில் நடைபெற்று வரும் கோட் படப்பிடிப்பின் போது கை மற்றும் தலையில் காயம் அடைந்ததாகவும், அதனால் தான் அவர் சோர்வுடன் காணப்படுவதாகவும் கூறி வருகின்றனர். ரஷ்யாவில் பைக் சேசிங் காட்சி படமாக்கப்பட்டபோது விஜய்க்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Thalapathy Vijay: படப்பிடிப்பை விட கடமை தான் முக்கியம்! ரஷ்யாவில் இருந்து.. வாக்களிக்க பறந்து வந்த தளபதி விஜய்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
உருசியா
தமிழக வெற்றி கழகம்
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved