தளபதி விஜய் தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்ற, ரசிகர்கள் மற்றும் TVK தொண்டர்கள் புடைசூழ வருகை தந்து வாக்களித்துள்ளார்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும், தளபதி விஜய் கோட் படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றிருந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் ரஷ்யாவில் இருந்து சென்னை வந்தடைந்தார். இதைத்தொடர்ந்து, நீலாங்கரையில் உள்ள பள்ளியில் தன்னுடைய வாக்கை பதிவு செய்ய ரசிகர்கள் மற்றும் TVK தொண்டர்களுடன் வருகை தந்து, வாக்களித்துள்ளார் இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தளபதி விஜய், படப்பிடிப்புக்காக துபாய் சென்றதாக கூறப்பட்ட நிலையில், அங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதால், விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விஜய் வாக்களிக்க வருவது மிகவும் கடினம் என கூறப்பட்டது. இதுகுறித்த தகவல்கள் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவிய நிலையில், இன்று காலை தளபதி விஜய் ரஷ்யாவில் தான் இருக்கிறார் என்கிற தகவல் வெளியானது.
இதை தொடர்ந்து காலை 10 மணியளவில், இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட 'கோட்' பட குழுவினருடன் ரஷ்யாவில் இருந்து சென்னை வந்த விஜய், நேராக நீலாங்கரையில் உள்ள தன்னுடைய இல்லத்திற்கு சென்ற நிலையில், 12.15 மணியளவில் அங்கிருந்து கிளம்பி நீலாங்கரையில் உள்ள பள்ளியில் தனக்கான வாக்கினை செலுத்தியுள்ளார்.
மேலும் வாகு செலுத்த வந்த நடிகர் விஜய்யை TVK தொண்டர்கள் மலர் தூவி அவரை வரவேற்றனர். பின்னர் கூட்டத்தில் தனது இடது கையை தூக்கியபடியே தளபதி சென்ற நிலையில், பின்னரே அவரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதும், அதில் பிளாத்திரி போட்டிருப்பதும் தெரிந்தது. இதை தொடர்ந்து தளபதி கையில் எப்படி காயம் ஏற்பட்டது என்பதே தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
