MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Thalapathy Vijay: படப்பிடிப்பை விட கடமை தான் முக்கியம்! ரஷ்யாவில் இருந்து.. வாக்களிக்க பறந்து வந்த தளபதி விஜய்

Thalapathy Vijay: படப்பிடிப்பை விட கடமை தான் முக்கியம்! ரஷ்யாவில் இருந்து.. வாக்களிக்க பறந்து வந்த தளபதி விஜய்

தளபதி விஜய் 'கோட்' படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருந்ததால், வாக்களிப்பதில் சிக்கல் உள்ளதாக தகவல் பரவிய நிலையில், தன்னுடைய கடமையை நிறைவேற்றுவதற்காக, ரஷ்யாவில் இருந்து சற்று முன், சென்னை வந்தடைந்தார். 

1 Min read
Author : manimegalai a
Published : Apr 19 2024, 11:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thalapathy vijay

Thalapathy vijay

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கிய நிலையில், எவ்வித பிரச்சனைகளும் இன்றி  பரபரப்பாக நடந்து வருகிறது. காலையில் இருந்தே பொதுமக்களுடன் வரிசையில் நின்று பிரபலங்கள் தங்களின் வாக்குகளை செலுத்தி வரும் செய்திகளும் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
 

24

அந்த வகையில் தமிழகத்திலேயே முதல் ஆளாக தல அஜித் தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றிய நிலையில், அவரை தொடர்ந்து, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதி, ராதிகா, சரத்குமார், வரலட்சுமி, பிரசன்னா, சினேகா, வெற்றிமாறன், லிங்குசாமி, காளி வெங்கட், வையாபுரி, நடிகர் பிரபு, சிபி  ராஜ், சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்து வருகிறார்கள்.

தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் காலையிலேயே வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்!
 

34

மேலும் தளபதி விஜய் கோட் படத்தில் படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் உள்ளதால், அவர் வாக்களிப்பது சந்தேகம் என்று கூறப்பட்டது. மேலும் விஜய் துபாய்யில் இருப்பதாக செய்திகள் பரவிய நிலையில் அங்கு பலத்த மழை பெய்துள்ளதால், ஏற்பட்ட வெள்ளம் காரணமான அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. எனவே விஜய் துபாயில் இருந்தால் கண்டிப்பாக இம்முறை வாக்களிக்க வரமாட்டார் என ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், தற்போது விஜய் வாக்களிப்பதற்காக சென்னை விரைந்துள்ளார்.
 

44

தளபதி விஜய்யின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து வந்ததால் வெள்ளத்தின் பதிப்பில் சிக்காமல்... தற்போது சென்னை வந்துள்ள விஜய், இன்னும் சில மணி நேரங்களில் சென்னை நீலாங்கரையில் உள்ள பள்ளியில் தன்னுடைய வாக்கை பதிவு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Breaking: தமிழகத்திலேயே முதல் ஆளாக வந்து வாக்களித்தார் நடிகர் அஜித்!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
உருசியா
தளபதி விஜய்
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved