MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் காலையிலேயே வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்!

தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் காலையிலேயே வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்!

தமிழகம் முத்துவதும் இன்று காலை 7 மணிமுதல், தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கிய நிலையில் காலையியலே வாக்களித்து வரும் பிரபலங்களின் புகைப்படங்கள் இதோ.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Apr 19 2024, 10:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113

இன்று காலை தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு துவங்கியது. முதல் ஆளாக காலை 6.45 மணிக்கே வாக்குச்சாவடிக்கு வந்த அஜித் திருவான்மியூர் பள்ளியில் வாக்களித்துவிட்டு சென்றார் என்பதை பார்த்தோம். அந்த வகையில் பிரபலங்கள் காலையிலேயே, தாங்கள் வாக்களிக்க உள்ள வாக்கு சாவடிக்கு சென்று வாக்களித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் தனுஷ் சென்னை, டிடிகே சாலையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் காலை 8 மணியளவில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
 

213

இதைத்தொடர்ந்து நடிகர் காளி வெங்கட்  சென்னை வளசரவாக்கம் பகுதியில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியில் தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

Rajinikanth: ஸ்டெல்லா மேரில் கல்லூரியில் வாக்களித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

313

அதே போல் பிரபல நடிகரும், இயக்குநருமான சசிகுமார் தன்னுடைய சொந்த ஊரான மதுரை புதுதாமரைப்பட்டி வாக்குசாவடியில் வாக்களித்தார். 

413

பிரபல நடிகர் விஜய் சேதுபதி, தன்னுடைய வீடு அமைந்துள்ள... சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்ததோடு மட்டும் இன்றி, இன்றைய நாளில் அனைவரும் தங்களின் கடமையாக நினைத்து வாக்களிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் வாக்களிக்கும் வாக்கு சாவடியில் திடீர் என நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு! என்ன ஆச்சு?

513

பிரபல நடிகை ராதிகா சரத்குமார், சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். 

613

சிவாஜி கணேசனின் வாரிசான, இளைய திலகம் நடிகர் பிரபு மனைவியுடன் வந்து சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

Breaking: தமிழகத்திலேயே முதல் ஆளாக வந்து வாக்களித்தார் நடிகர் அஜித்!

713

தல அஜித் திருவான்மியூர் பாரதிதாசன் தெருவில் உள்ள மேல்நிலைப் பள்ளியில், வாக்களிப்பதற்காக சரியாக 6.45 மணிக்கே வந்து காத்திருந்து, சரியாக 7 மணிக்கு வாக்களிப்பு துவங்கியதும் முதல் ஆளாக தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார்.

813

பிரபல இயக்குனர் வெற்றிமாறன், தன்னுடைய மனவியடன் வந்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் வாக்களித்தார்.

Rajinikanth: வாக்களித்துவிட்டேன் என்று சொால்வது தான் பெருமை; ரஜினிகாந்த் அறிவுரை

913

நடிகை குஷ்பூ, தன்னுடைய கணவர் சுந்தர் சி, மகள்கள் அவந்திகா மற்றும் அனந்திடாவுடன் வந்து... சென்னை மந்தைவெளி பகுதியில் அமைந்துள்ள ராஜலட்சுமி மெட்ரிக் பள்ளியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்.

1013

இயக்குனர் மோகன் ஜி, வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில்... இன்று காலை 8 மணியளவில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தன்னுடைய வாக்கினை செலுத்தினார்.

1113

அதே போல் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள், தன்னுடைய வீடு அமைந்துள்ள தி.நகர் பகுதிக்கு அருகாமையில் உள்ள ராமகிருஷ்ணா நர்சரி பள்ளியில், இன்று காலை 8:30 மணியளவில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்.

1213

நடிகர் வையாபுரி தனது மகனுடன் இணைந்து, வளசரவாக்கம் வேளாங்கண்ணி பள்ளியில் காலை 7' மணிக்கு முதல் ஆளாக வாக்களித்தார். இந்த முறை வையாபுரியின் மகள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளதாகவும், கட்டாயம் அனைவரும் வாக்களிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

1313

நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் வந்து வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இவர், நமது வாக்கு நமது உரிமை, வாக்களிப்பது நமது கடமை. ஆபிரகாம் லிங்கன் கூறியதுபோல் புல்லட்டை விட வலிமை வாய்ந்தது வாக்கு. வாக்கு செலுத்தினால்தான் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க முடியும். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்
ரஜினிகாந்த்
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved