MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Garudan : பாக்ஸ் ஆபிஸில் சூப்பர்ஸ்டாருக்கே தண்ணிகாட்டிய சூரி... ரஜினி பட வசூலை அசால்டாக அடிச்சு தூக்கிய கருடன்

Garudan : பாக்ஸ் ஆபிஸில் சூப்பர்ஸ்டாருக்கே தண்ணிகாட்டிய சூரி... ரஜினி பட வசூலை அசால்டாக அடிச்சு தூக்கிய கருடன்

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் கருடன் படத்தின் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 03 2024, 08:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Garudan

Garudan

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வந்தவர் சூரி. வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இவர் நடித்த பரோட்டா காமெடி வேறலெவலில் ஹிட்டானதால் ரசிகர்களால் பரோட்டா சூரி என கொண்டாடப்பட்டு வருகிறார். சூரியை காமெடியனாக பார்த்த ரசிகர்களுக்கு, அவருக்குள் ஒரு நடிகன் ஒளிந்திருக்கிறார் என்பதை தன்னுடைய விடுதலை படம் மூலம் வெளிச்சம் போட்டு காட்டி இருந்தார் வெற்றிமாறன். அப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார் சூரி.

24
Garudan hero Soori

Garudan hero Soori

விடுதலை படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பின்னர் அவருக்கு ஹீரோவாக நடிக்க சான்ஸ் குவிந்தது. அந்த வகையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள அடுத்த திரைப்படம் தான் கருடன். இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார். இதில் சூரி ஹீரோவாக நடிக்க அவருடன் சசிகுமார் மற்றும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோரு முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சீரியல் நடிகை ரோஷினி, நடிகை பிரிகிடா ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்... Rajini : வேட்டையன் ரிலீஸ் தேதி என்ன? கூலி ஷூட்டிங் எப்போ துவங்கும்? இரண்டிற்கும் பதில் கொடுத்த சூப்பர் ஸ்டார்!

34
garudan Box Office

garudan Box Office

கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக உருவாகி இருக்கும் கருடன் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் கடந்த மே 31-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரைக்கு வந்த இப்படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.3.5 கோடி வசூலித்து இருந்தது. இதையடுத்து இரண்டாம் நாளில் பிக் அப் ஆன இப்படம் ரூ.4.85 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்தது. இந்நிலையில் மூன்றாம் நாளான நேற்று கருடன் படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்கிற விவரம் வெளியாகி உள்ளது.

44
Garudan Day 3 Box Office Collection

Garudan Day 3 Box Office Collection

அதன்படி 3-ம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கருடன் படம் ரூ.6.10 கோடி வசூலை வாரிக்குவித்து இருக்கிறதாம். இதன்மூலம் அப்படம் மூன்று நாட்களில் மொத்தமாக ரூ.14.45 கோடி வசூலித்து உள்ளது. இது ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த லால் சலாம் படத்தின் மூன்று நாள் வசூலை விட அதிகமாகும். அப்படம் மூன்று நாட்களில் வெறும் 10 கோடி மட்டுமே வசூலித்திருந்த நிலையில், கருடன் படம் அதை அசால்டாக அடிச்சு தூக்கி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... புது கெட்டப்பில் சூர்யா.. கார்த்தி சுப்புராஜ் ஸ்டைலில் ஒரு Period Gangster படம் - வைரலாகும் Suriya 44 Video!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்
சூரி (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved