- Home
- Gallery
- Rajini : வேட்டையன் ரிலீஸ் தேதி என்ன? கூலி ஷூட்டிங் எப்போ துவங்கும்? இரண்டிற்கும் பதில் கொடுத்த சூப்பர் ஸ்டார்!
Rajini : வேட்டையன் ரிலீஸ் தேதி என்ன? கூலி ஷூட்டிங் எப்போ துவங்கும்? இரண்டிற்கும் பதில் கொடுத்த சூப்பர் ஸ்டார்!
Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படம் உருவாக உள்ளது. விரைவில் அப்பட பணிகள் துவங்கும்.

Coolie
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தபடியாக உருவாக உள்ள திரைப்படம் தான் "கூலி". இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். தமிழ் சினிமாவின் மிகவும் விரும்பப்படும் ஒரு இயக்குனராக லோகேஷ் கனகராஜ் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Himalayas
இந்நிலையில் அந்த திரைப்படத்தின் பணிகளை துவங்குவதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அமீரகத்திற்கு சென்று ஓய்வெடுத்த நிலையில் தற்பொழுது இமயமலையில் தியானம் செய்ய சென்றுள்ளார் அங்கு சில துறவிகளையும் அவர் சந்தித்து பேசியுள்ளார்.
vettaiyan movie
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு துறவியிடம் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் வேட்டையன் திரைப்படம் குறித்து பேசும்பொழுது அந்த திரைப்படம் தசரா பண்டிகையன்று வெளியாக உள்ளதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறுகின்றார். ஆகவே வேட்டையன் திரைப்படம் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Rajini
அதேபோல கூலி திரைப்படம் குறித்து அவர் கேட்ட பொழுது ஜூன் மாதம் பத்தாம் தேதி முதல் பட பணிகளை தான் துவங்க உள்ளதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறுகின்றார். எனவே தனது இமயமலை பயணத்தை முடித்து சென்னை திரும்பி அவர் அப்பாடப் பணிகளை ஜூன் 10ஆம் தேதி முதல் துவங்குவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.