பர்த்டே பார்ட்டி வைத்த பியூட்டி... 46-வது பிறந்தநாளை கோலிவுட் பிரெண்ட்ஸ் உடன் கொண்டாடிய சங்கீதா - போட்டோஸ் இதோ
பாடகர் கிரிஷின் மனைவி நடிகை சங்கீதாவின் 46-வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
suja varunee, sangeetha
1997-ம் ஆண்டு வெளிவந்த கங்கோத்ரி என்கிற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சங்கீதா. இதையடுத்து 1998-ம் ஆண்டு வெளிவந்த காதலே நிம்மதி படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் சங்கீதா. இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வந்தார் சங்கீதா.
suja varunee, krish
நடிகை சங்கீதாவுக்கு கோலிவுட்டில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் பிதாமகன். பாலா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு, சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் மாநில விருதும் கிடைத்தது. பின்னர் உயிர், தனம், நேபாளி என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார் சங்கீதா.
sangeetha birthday celebration
இதையடுத்து கடந்த 2009-ம் ஆண்டு பாடகர் கிரிஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சங்கீதா. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்துக்கு பின்னர் தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சங்கீதா, சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக செயல்பட்டு வந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
sangeetha birthday party
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் 3 சீசன்களுக்கு சங்கீதா தான் நடுவராக இருந்தார். இதையடுத்து எங்க வீட்டு பிள்ளை என்கிற நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்காக தொகுத்து வழங்கினார். இவர் நேற்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
sangeetha birthday clicks
46-வது பிறந்தநாளையொட்டி தனது கோலிவுட் நண்பர்களுக்கு பார்ட்டி ஒன்றையும் கொடுத்திருந்தார் சங்கீதா. அதில் நடிகர் ஷியாம், பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணி, நடிகர் சிவாஜியின் பேரனும் நடிகருமான சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
celebrities at sangeetha birthday party
சங்கீதாவின் பர்த்டே பார்ட்டியில் நடிகை சுஜா வருணி, நடிகர் ஷியாம் மற்றும் ஷிவகுமார் எடுத்த கேண்டிட் போட்டோ இது.
sangeetha friend suja varunee
சங்கீதாவின் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகை சுஜா வருணி, தன் தோழியை கட்டியணைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருணம் இது.
sangeetha and shivakumar
சுஜா வருணியின் கணவரும் நடிகருமான ஷிவகுமார், நடிகை சங்கீதாவை கட்டியணைத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியபோது எடுத்த புகைப்படம் இது.
இதையும் படியுங்கள்... நாயகன் மீண்டும் வரார்... மறுவெளியீட்டுக்கு தயாரான கமல்ஹாசனின் கிளாசிக் ஹிட் படம்! எப்போ ரிலீஸ் தெரியுமா?