வீட்டை இப்படி சுத்தம் செய்ங்க.. எப்போதும் பளபளனு இருக்கும்..!
House Cleaning Tips : நீங்கள் உங்கள் வீட்டை எளிய முறையில் சுத்தம் செய்ய சில உதவி குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை..
நீங்கள் உங்கள் வீட்டை சுத்தமாக வைக்க முதலில் அழுக்கு துணிகளை ஆங்காங்கே போடாமல், லாண்டரி பாஸ்கெட்டில் போட்டு வையுங்கள். முக்கியமாக, அந்த லாண்டரி பாஸ்கெட்டை குளிக்கும் அறையில் வையுங்கள்.
மாதம் ஒருமாதம் வரையாவது கண்டிப்பாக வீட்டை ஒட்டடை அடிக்க வேண்டும். அப்போது தான் வீட்டு சீக்கிரம் அழுக்காமல், பார்ப்பதற்கு சுத்தமாக இருக்கும்.
சமையலறையில் சமையல் செய்த பிறகு, உடனே சுத்தம் செய்யுங்கள். இதற்கு, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் பாத்திரம் கழுவும் லிக்விட், வினிகர், தண்ணீர் ஆகியவற்றின் நன்கு கலந்து, அதை கிச்சனை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்துங்கள்.
வீட்டில் மாப் போட்டு சுத்தம் செய்யும்போது, தண்ணீரில் மஞ்சள் கலந்து சுத்தம் செய்யுங்கள். அப்போதுதான் கிருமிகள் பரவாது.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் துணியில் இருந்து நாற்றம் அடிக்குதா? உங்களுக்காக நச்சுனு 8 டிப்ஸ் இதோ!
நீங்கள் உங்கள் வீட்டை சுத்தம் செய்யும் நாளில் மதிய உணவையும் காலையிலேயே செய்து முடித்து விடுங்கள். அப்போதுதான் உங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது. வீட்டையும் சுலபமாக சுத்தம் செய்ய முடியும்.
இதையும் படிங்க: பாத்திரம் கழுவும் ஸ்கிரப்பர்.. ரொம்ப நாள் யூஸ் பண்றீங்களா? இத படிச்சா இனி இந்த தப்பு பண்ணமாட்டீங்க!
வீட்டை சுத்தம் செய்யும் போது, களைப்பாகவும், சிரமமாகவும் உணராதபடி, பாட்டு கேட்டு கொண்டு சுத்தம் செய்யுங்கள்.