- Home
- Gallery
- பாத்திரம் கழுவும் ஸ்கிரப்பர்.. ரொம்ப நாள் யூஸ் பண்றீங்களா? இத படிச்சா இனி இந்த தப்பு பண்ணமாட்டீங்க!
பாத்திரம் கழுவும் ஸ்கிரப்பர்.. ரொம்ப நாள் யூஸ் பண்றீங்களா? இத படிச்சா இனி இந்த தப்பு பண்ணமாட்டீங்க!
Dish Scrubber Tips : பாத்திரங்களை கழுவுவதற்கு பயன்படுத்தும் ஸ்க்ரப்பை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை அதை மாற்ற வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

Dish Scrubber Tips
பொதுவாகவே, நாம் பாத்திரங்களை கழுவுவதற்கு ஸ்க்ரப் பயன்படுத்துவோம். இது நொடியில் சுத்தம் செய்யும். இந்த டிஷ் வாஷ் ஸ்க்ரப் நன்கு தேய்ந்து போன பிறகுதான், அதை நாம் குப்பையில் போடுகிறோம். ஆனால் அவற்றை இப்படி பயன்படுத்தலாமா? இதனால் என்ன ஆகும்? எத்தனை நாட்களுக்கு ஒருமுறை அதை மாற்ற வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
Dish Scrubber Tips
ஆய்வு ஒன்றில், நுண்ணுயிரிகள் வாழ்வதற்கு ஸ்க்ரப் ஒரு நல்ல வாழ்விடம் என்று கூறுகிறது. ஸ்கிராப் வீட்டில் உள்ள மிகவும் மாசுபடுத்தும் பொருட்களில் ஒன்றாகும். அதாவது, இது பாதுகாப்பானது அல்ல என்று கண்டறிந்துள்ளனர்.
Dish Scrubber Tips
எனவே, நீங்கள் அதை வாரம் ஒரு முறை கண்டிப்பாக மாற்றுவது பாதுகாப்பானது என்கின்ற நிபுணர்கள். இல்லையெனில், அதில் இருக்கும் கிருமிகள் நமக்கு பரவி, நாம் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்.
இதையும் படிங்க: எலுமிச்சை சூப்பரா சுத்தம் செய்யும் தான்.. ஆனா இந்த 5 பொருட்களில் மட்டும் யூஸ் பண்ணாதீங்க..!
Dish Scrubber Tips
ஒருவேளை உங்களால் டிஸ் வாஷ் ஸ்க்ரப்பை வாரம் ஒரு முறை மாற்ற முடியாவிட்டால், அதை சூடான வெந்நீரில் சுமார் 2 நிமிடம் ஊற வைத்து, பிறகு பயன்படுத்துங்கள்.
இதையும் படிங்க: 10 நிமிஷம் தான்.. இனி Table Fan கிளீன் பண்றது ரொம்பவே ஈஸி..!!
Dish Scrubber Tips
உங்களுக்கு தெரியுமா? டிஷ் வாஷ் ஸ்க்ரப்பரை பிளீச்சிங் பவுடர் கொண்டும் சுத்தம் செய்யலாம். இதற்கு அரை ஸ்பூன் பவுடரை தண்ணீரில் கலந்து, அந்த நீரில் ஸ்க்ரப்பரை ஊற வைக்கவும். இப்படி செய்தால் ஸ்கிரபில் இருக்கும் கிருமிகள் நீங்கும். இருந்தபோதிலும் நீங்கள் ஸ்கிரப்பரை வாரம் ஒரு முறை மாற்றுவது தான் நல்லது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D