Shrurti Haasan: வடபோச்சே.. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஸ்ருதிஹாசன்- அதுவும் இந்த ஹிட் படத்திலா?
நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணியது பற்றி பார்க்கலாம்.
Shruti Haasan
கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், பாடகி, நடிகை, இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக பிரபாஸின் சலார் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் இனிமேல் என்கிற ஆல்பம் பாடலை இசையமைத்து வெளியிட்டு இருந்தார் ஸ்ருதிஹாசன். அந்த ஆல்பம் பாடலில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார்.
Shruti haasan first choice for remo movie
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக கொடிகட்டிப்பறந்த ஸ்ருதிஹாசனுக்கு இன்று கோலிவுட்டில் கைவசம் ஒரு படம் கூட இல்லை. இந்த நிலையில். நடிகை ஸ்ருதிஹாசன் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை நழுவவிட்டது பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்ன படம், எதற்காக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க மறுத்தார் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... கைப்புள்ள ரிட்டர்ன்ஸ்... மீண்டும் வடிவேலு உடன் கூட்டணி அமைக்கும் சுந்தர் சி - சுடசுட வெளிவந்த அப்டேட்
sivakarthikeyan, Shruti Haasan
அதன்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றிபெற்ற ரெமோ திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஸ்ருதிஹாசனை தான் முதன்முதலில் அணுகினார்களாம். ஆனால் அவர் அந்த சமயத்தில் முன்னணி நடிகர்களின் படங்களில் பிசியாக இருந்ததால் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டாராம். அதன்பின்னர் தான் அந்த வாய்ப்பு நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சென்றிருக்கிறது.
Keerthy Suresh Replace Shruti haasan in Remo
ரெமோ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கி இருந்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் நர்சாக லேடி கெட்டப்பிலும் நடித்து அசத்தி இருந்தார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரெமோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆனாலும், அவர் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே திரைப்படத்தில் இடம்பெற்ற உன் விழிகளில் என்கிற பாடலை அனிருத் உடன் சேர்ந்து ஸ்ருதிஹாசன் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Rajini : அன்று ரஜினியை ஜீரோனு விமர்சித்த ரோஜா... இன்று ஆந்திர அரசியலில் ஹீரோவாக ஜொலிக்கும் சூப்பர்ஸ்டார்