அடுத்தடுத்த மரணத்தால்... 3 முறை தற்கொலைக்கு முயன்ற நடிகை கவிதா! ஒவ்வொரு நாளும் கண்ணீர் விட்டு கதறும் பிரபலம்!
பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள நடிகை கவிதா கொரோனாவின் கோர பசிக்கு கணவரையும், மகனையும் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்பதாக கண்ணீர் வடித்துள்ளார்.
Actress Kavitha
ஆத்திர மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை கவிதா. குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய 11 வயதில் திரையுலகில் அறிமுகமான இவர், ஹீரோயின், முதல் குணச்சித்திர கதாபாத்திரம் வரை பல வேடங்களில் நடித்து பிரபலமானவர்.
Actress Kavitha
அம்மா, மாமியார், வில்லி, என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அப்படியே உள்வாங்கிக்கொண்டு நடித்து அசத்துபவர். தெலுங்கில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கவிதா. தமிழிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில், காற்றினிலே வரும் கீதம், அந்தமான் காதலி, நாடோடி தென்றல், வைதேகி கல்யாணம், செந்தமிழ் பாட்டு, பாண்டவர் பூமி என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், சில சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார்.
குறிப்பாக சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, கங்கா, நந்தினி போன்ற தொடர்களில் நடித்திருந்தார். அதே போல் பாஜக கட்சியிலும் இணைந்து பணியாற்றிவந்தார்.
kavitha
கணவர் - மகன் என மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த கவிதாவின் வாழ்க்கையையே திருப்பி போட்டது கொரோனாவின் கோரத்தாண்டவம் தான்.
கொரோனாவின் இரண்டாவது அலையின் போது நடிகை கவிதாவின் மகன் சாய் ரூப் முதலில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார். இவரை தொடர்ந்து கவிதாவின் கணவர் தசரத ராஜும் கொரோனாவால் உயிரிழந்தார். தன்னுடைய ஒரே மகன் மற்றும் கணவரை இழந்த பின்னர் வீட்டை விட்டு அதிகம் வெளியே வருவதை குறைத்துக்கொண்ட கவிதா, ஒவ்வொரு நாளும் இந்த சம்பவத்தை நினைத்து கண்ணீர் விட்டு கதறி வருகிறாராம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதே போல் மூன்று முறை கணவன் - மகன் சென்ற இடத்திற்கே சென்று விடலாம் என தற்கொலைக்கு முயன்ற நிலையில்... உறவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.