5 பேர உள்ள அனுப்பிட்டு... 2 பேரை வெளியேற்றிய பிக்பாஸ்.! வைல்டு கார்டு என்ட்ரியால் நடந்த டுவிஸ்ட்? முழு விவரம்!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் 5 வயல் கார்டு போட்டியாளர்கள் உள்ளே என்ட்ரி கொடுக்கவுள்ள நிலையில், பழைய போட்டியாளர்களில் இருவர் இந்த வாரம் வெளியேற உள்ளதாக சில நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
Bigg boss season 7
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் டிவியில் அக்டோபர் 1-ம் தேதி, மொத்தம் 18 போட்டியாளர்களுடன் துவங்கியது. முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நிலையில், இவரை தொடர்ந்து அனன்யா ராவ், பவா செல்லதுரை, வனிதாவின் மகள் ஜோவிகா, விசித்ரா, வினுஷா, விஷ்ணு, நிக்சன், பிரதீப், விஜய் வர்மா, ஐஷு, ரவீனா தாஹா, மணி சந்திரா யுகேந்திரன் ஆகியோர் அடுத்தடுத்து உள்ளே வந்தனர்.
Bigg boss season 7 contestant list:
மேலும் இந்த முறை, முதல் 6 சீசன்களை விட மிகவும் வித்தியாசமாக கட்டமைக்க பட்டிருந்தது பிக்பாஸ் வீடு. 60 கேமராக்களை பதில் 120 கேமராக்கள் மற்றும் 1 வீட்டுக்கு பதில் 2 வீடுகள் போட்டியாளர்களுக்காக வடிவமைத்திருந்தனர். அதே போல் முதல் வாரமே நாமினேஷன் படலம் நடைபெற்ற நிலையில், முதல் போட்டியாளராக பிரபல மாடல் அனன்யா ராவ் வெளியேறினார். இவரை தொடர்ந்து பவா செல்லதுரையும் முதல் வாரமே வெளியேறியதால் இரண்டாவது வாரம் எவிக்ஷன் இல்லை என அறிவிக்கப்பட்டது.
vijay varma elimination:
கடந்த வாரம், போட்டியாளர்களிடம் தொடர்ந்து முரட்டு தனமாக நடந்து கொண்டதால், விஜய் வர்மா மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
5 Wild card Entry:
இதை தொடர்ந்து, இந்த வாரம் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் சற்றும் யூகித்து பார்க்க முடியாத வகையில் 5 பேர் வயல் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைய உள்ளனர். அதன்படி, கானா பாலா, விஜே அர்ச்சனா, ரக்ஷிதாவின் கணவரும் சீரியல் நடிகருமான தினேஷ், மேடை பேச்சாளர் பாரதி, ஆர்.ஜே.பிராவோ ஆகியோர் உள்ளே என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
2 contestant eviction:
திடீர் என 5 போட்டியாளர்களை உள்ளே இறங்குவதால், அதிரடியாக இந்த முறை இரண்டு போட்டியாளர்களை பிக்பாஸ் வெளியே அனுப்பவும் முடிவு செய்து விட்டாராம். அந்த வகையில், யாரும் எதிர்பார்த்திராத வகையில் வந்த நாளில் இருந்து டல் கண்டெஸ்டெண்டாக சுற்றி வரும், வினுஷா மற்றும், பாடகரும் - நடிகருமான யுகேந்திரன் ஆகியோரை வெளியேறியுள்ளதாக சில நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறியுள்ளதாக செய்திகள் வலம் வருகிறது.
Biggboss season 7 tamil twist:
எனினும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதையும்... இதிலும் எதாவது ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.