கையில் சரக்குடன் பார்ட்டி பண்ணும் மணமகள்! மாடர்ன் உடையில் ரொமான்டிக் போட்டோ ஷூட்.. களைகட்டிய ஷாரிக் வெட்டிங்!
நட்சத்திர ஜோடியான உமா - ரியாஸ் கான் ஆகியோரின் மகன் ஷாரிக் ஹாசனின் திருமணத்தை முன்னிட்டு இவர்கள் நடத்திய லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Kamala Kamesh Daughter Uma
தமிழில் 'சம்சாரம் அது மின்சாரம்', 'அலைகள் ஓய்வதில்லை' உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த பிரபலமானவர் நடிகை கமலா காமேஷ். காமேஷ் ஒரு இசையமைப்பாளர் ஆவார். இவர்களின் மகள் உமா, அப்பா - அம்மா இருவருமே திரையுலகை சேர்ந்தவர்கள் என்பதால், தன்னுடைய இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கினார்.
Uma Riyaz Debut in Anbulla Rajinikanth
அந்த வகையில் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் அறிமுகமான இவர், இதைத்தொடர்ந்து ஹிந்தியிலும் நடித்தார். ஆனால் உமாவுக்கு சிறந்த அறிமுகத்தை பெற்று தந்தது, 2003 ஆம் ஆண்டு கமல்ஹாசனுடன் நடித்த அன்பே சிவம் திரைப்படம் தான்.
ஒரு உயர்ந்த சக்தி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது! வினேஷ் போகத்திற்கு சமந்தா ஆதரவு!
Uma Riyaz Movies
இதை தொடர்ந்து, கனவு மெய்ப்பட வேண்டும், மௌனகுரு, அம்புலி, மரியான், பிரியாணி, தூங்காவனம், போன்ற பல படங்களில் நடித்தார். 1992 ஆம் ஆண்டு, தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான வில்லன் நடிகராக அறியப்படும் ரியாஸ் கானை காதலித்த திருமணம் செய்து கொண்டார்.
Uma Riyaz son's
குழந்தைகள் பிறந்த பின்னர் நடிப்பில் பெரிதாக கவனம் செலுத்தாத உமா, தன்னுடைய மகன்கள் இருவரும் வளர்ந்த பின்னர் மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்ட தொடங்கினார். அந்த வகையில் தற்போது பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
Uma Riyaz Serial
குறிப்பாக சன் டிவியில் TRP-யில் 2-ஆவது இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ள 'கயல்' சீரியலில் எழிலின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
Uma Riyaz Reality Shows
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் ரன்னரப்பாக மாறிய உமா, குக் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் கெஸ்டாக கலந்து கொண்டார். அதேபோல் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சிகள் நடுவராக இருந்தார்.
Shariq Hassan Debut tamil cinema
இவருடைய மகன் ஷாரிக் ஹாசன் தமிழில், 2016-ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பென்சில்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் ஷாரிக் நடித்திருந்தார். பின்னர் சினிமாவில் சிறந்த அறிமுகம் வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி 49-ஆவது நாளில் வெளியேறினார்.
Shariq Hassan Parthicipate Bigg boss
இதை தொடர்ந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக வந்த ஷாரிக் 21 வது நாளில் வெளியேற்றப்பட்டார்.
Shariq Hassan wedding
29 வயதாகும் இவருக்கு தற்போது திருமண ஏற்பாடுகள் கலைகட்டி உள்ளன. ஷாரிக் - மரியா என்கிற தன்னுடைய காதலியை தான் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளார். அதன்படி இவர்களுடைய திருமணம் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. இவர்களின் திருமண கொண்டாட்டம் மெஹந்தி நிகழச்சியுடன் துவங்கியுள்ள நிலையில், ஷாரிக் மற்றும் மரியாவின் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Shariq Hassan girl friend drink Party
நடிகர் ரியாஸ் கானும் மலையாளத்தில், தன்னுடைய மகனுக்கு கல்யாணம்.. கறி. சோறு. கல்லு என எல்லாமே இருக்கு வாங்க என அனைவருக்கும் அழைப்பு விடுப்பது போல் ரீல்ஸ் ஒன்றை வெளியிட, அதில் மணப்பெண் மரியா, கையில் சரக்கு பாட்டிலுடன் தோழிகளுடன் பார்ட்டி செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.