இதை எதிர்பார்க்கவே இல்லையே? TRP குறைந்ததால் சட்டு புட்டுன்னு ஹிட் சீரியலை முடிவுக்கு கொண்டுவரும் சன் டிவி!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல், கூடிய விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சுந்தரி' சீரியல், கன்னட மொழியில் துவங்கப்பட்ட 'சுந்தரி' என்கிற தொடரின், தமிழ் ஆக்கமாகவே அதே பெயரில் கடந்த 2021-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
இந்த தொடரில் டிக் டாக் பிரபலமும், நடிகையுமான கேப்ரில்லா செலஸ் ஹீரோயினாக நடிக்க, ஜிஷ்ணு மேனன் மற்றும் ஸ்ரீ கோபிகா நீலநாத் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், சிறு வயதில் இருந்தே ஐஏஎஸ் ஆக வேண்டும் என கனவு காண்கிறாள். அவரின் கனவு மெய்ப்பட அவரின் அப்பாதாவும் ஊக்கம் கொடுக்க... கட்டிய கணவன் துரோகம் இழைத்ததை தாண்டி பல்வேறு போராட்டங்களை கடந்து, ஐஏஎஸ் அதிகாரியாக மாறுகிறார் சுந்தரி.
இந்த சீரியலின் முதல் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் வெற்றியை தொடர்ந்து, கடந்த ஆண்டு இந்த தொடரின் இரண்டாம் பாகவும் துவங்கப்பட்டது. அதன்படி தற்போது ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும் சுந்தரி, கார்த்திக் மற்றும் அனு ஆகியோருக்கு பிறந்த தமிழ் பாப்பாவுக்கு அம்மாவாகவே வாழ்ந்து வருகிறார்.
கார்த்திக் எப்படியும் சுந்தரியிடம் இருந்து குழந்தையை பிரித்து அழைத்துச் செல்ல வேண்டும் என நினைக்கிறார். இந்த நிலையில் கார்த்திக்கின் எண்ணம் நிறைவேறுகிறதா? அனு மீண்டும் இந்த சீரியலுக்குள் வருவாரா? என யூகிக்க முடியாத கதைகளத்துடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
உடலோடு ஒட்டியபடி இருக்கும்... டைட் உடையில் அழகிய ஆரஞ்சி பழம் போல் போஸ் கொடுக்கும் ஹன்சிகா!
ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சேரியலின், டிஆர்பி மிகவும் பின்னடைவை சந்தித்து வருவதால், சட்டுபுட்டுன இந்த தொடரை முடித்துவிட்டு புதிய தொடரை ஒளிபரப்ப சன் டிவி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இதுவரை சீரியல் தரப்பிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ஆனால் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள அடுத்தடுத்த தொடர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.