MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சாகும் வரை கொடுமைப்படுத்திய வில்லியம்ஸ்! சாப்பாட்டுக்கு வழியில்லாமல் செய்த காரியம்! கலங்கி நின்ற சாந்தி!

சாகும் வரை கொடுமைப்படுத்திய வில்லியம்ஸ்! சாப்பாட்டுக்கு வழியில்லாமல் செய்த காரியம்! கலங்கி நின்ற சாந்தி!

இன்று சீரியல்களில் வில்லியாக வலம் வரும் நடிகை சாந்தி வில்லம்ஸ்... திருமணத்திற்கு பிறகும், கணவர் இறந்த பிறகும் பட்ட கஷ்டங்கள் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இதோ.. 

3 Min read
Author : manimegalai a
Published : Mar 15 2024, 08:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

சாந்தி வில்லியம்ஸ் சாய் வித் சித்ரா என்கிற நிகழ்ச்சியில் பேசியதை... முகநூல் பக்கத்தில் கனத்த மனதுடன் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது சாந்தி என்கிற நடிகையை விட, சாந்தி என்கிற போராளி எனக்கு தெரிந்தார் என்பது தான் நிஜம். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

கணவன்-மனைவி என்பது ஒரு தர்மம் சார்ந்த விஷயம். எந்த கணவன் தன் மனைவியை கை பிடிக்கிறானோ அன்று முதல் அவளை தன் கண்ணைப்போல் பாதுகாப்பான் என்பது தான் இந்திய தேச தர்மம். சாந்தி தன் கணவர் வில்லியம்ஸைப்பற்றி சொல்லி இருப்பதை பார்க்கும் போது மனம் படபடப்பானது உண்மை. 

Nadhiya: இனி அப்படி கூப்பிட்டா முத்தம் கொடுத்துடுவேன்! நதியாவை உதட்டை மூடிக்கொண்டு ஓடவைத்த நடிகர்!

38

93 கால கட்டத்தில் கொச்சியில் ஒரு ஷுட்டிங்கினிடையில் வில்லியம்ஸை கண்டதுண்டு. அப்போதே யாருடா இந்த ஆள் மனுஷனா? என்பது போல் தான் இருந்தார். ஆனால் மனுஷன் கேமிரா வொர்க்கில் அசகாய சூரன் என்பது பின்னாளில் அவரைப்பற்றி படிக்கும் போது தெரிந்தது. உயரமான எந்த ஷாட்டானாலும் மனுஷன் கிரேன் கூட வேண்டாம். பக்கத்தில் ஒரு மரமிருந்தால் ஏறி அதில் கயிறு கட்டி தொங்கிக்கொண்டே படம் பிடிப்பார். 

48
shanthi williams

shanthi williams

'மிஸ்டர் மைக்கேல்' என்றொரு படம். அது அவரே தயாரித்து இயக்கியது. அதில் நாயகி சீமாவின் அம்மாவாக ப்ளாஷ்பேக்கில் நடிக்க அணுகி இருக்கிறார். ஏதோ நல்ல ரோல் என நினைக்க வேண்டாம். வில்லன் சிலோன் மனோகர் சாந்தியை நைட்டியை கிழித்து மேலாடை தெரிய உடம்பும் தெரிய படமெடுத்திருப்பார் வில்லியம்ஸ்.  யூடியூபில் இருக்கிறது.

மறுபிறப்பு உண்மையாக இருந்தால்.. மறைந்த சூரிய கிரண் குறித்து கண்ணீருடன் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சுஜிதா போட்ட பதிவு
 

58

இப்படி ஒரு காட்சியை எடுத்த இந்த கேமிராமேனை நம்பி தன் பெண்ணைக்கொடுத்த சாந்தியின் அப்பாவைத்தான் சொல்ல வேண்டும். ஷோலே படத்தில் தர்மேந்திரா தண்ணீர் தொட்டியிலிருந்து குதித்து விடுவேன் என மிரட்டி ஹேமமாலினியை பெண் கேட்பார். அப்படி பாம்குரோவ் ஹோட்டல் மேலிருந்து மிரட்டி இருக்கிறார். சாந்தி அப்பாவிப்பெண்ணாக இருந்திருக்கிறார். அதனாலேயே தந்தை சொல்லுக்கு கட்டுப்பட்டு வில்லியம்ஸை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். சாந்தியின் அப்பா வில்லியம்ஸை விட மோசமான மனிதர் போல. 

68

சாகும் வரை வில்லியம்ஸ் கொடுமைப்படுத்தினாலும் சாந்தி தன் மனைவி என்கிற தர்மப்படி வாழ்ந்திருக்கிறார். 'நெஞ்சத்தை கிள்ளாதே' ஷூட்டிங் இடையில் தான் சாந்தி-வில்லியம்ஸ் திருமணம் நடந்திருக்கிறது. அந்தப்படத்தில் சுஹாசினியின் கொடுமைக்கார அண்ணி சாந்தி. ஒரு காட்சியில் சாந்தி குளிக்கும் தண்ணீரில் மிளகாய்பொடியை சுஹாசினி கலந்து விடுவார். அதை உடம்பில் குளிக்க ஊற்றும் போது சாந்தி உடம்பு மிளகாயால் எரியும். பாவாடையோடு பாத்ரூமிலிருந்து வர சுஹாசினி சிரிக்கும் காட்சி. இந்தக்காட்சியில் நான் நடிக்கமாட்டேன் என சாந்தி சொல்லி விடுகிறார். மகேந்திரன் மற்றும் யூனிட்டாருக்கு அதிர்ச்சி. என்ன விஷயம் எனக்கேட்க 'தனக்கு திருமணமாகி விட்டது..இனி இம்மாதிரி உடல் தெரியும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்' எனக்கறாராக சொல்லி விட மகேந்திரன் சமாதானம் செய்கிறார். மற்றொரு ஆள் முன்பு சேலையின்றி நடிக்க மாட்டேன் எனச்சொல்ல கடைசியில் பஞ்சாயத்து கணவர் வில்லியம்ஸிடம் போகிறது. அவரும் நடித்துக்கொடுக்கச்சொல்ல சாந்தி மறுக்க கடைசியில் கேமிராமேன் அசோக்குமார் நகர வில்லியம்ஸ் அந்தக்காட்சியை மட்டும் எடுத்துக்கொடுக்க சாந்தி நடித்துக்கொடுக்கிறார். படத்தில் அந்த காட்சி மட்டும் வில்லியம்ஸ் எடுத்தது.

Aishwarya Lekshmi: 'பொன்னியின் செல்வன்' பூங்குழலியா இது? டீப் நெக் கவர்ச்சியில்... அதிரி புரிதி ஹாட் போட்டோஸ்

78

வில்லியம்ஸின் சொந்தப்படத்தில் உள்ளாடை தெரிய மோசமான காட்சியில் வில்லியம்ஸின் கேமராக்கண்களுக்கு முன் நடித்த சாந்தி திருமணமாகி விட்ட பிறகு நடிக்கமாட்டேன் எனச்சொல்வதிலிருந்து வில்லியம்சுக்கு மறைமுகமாக அவர் தன்னைப்பற்றி உணர்த்தி இருக்கிறார். மனைவி தர்மம்... கொடுமை என்னவென்றால் சாந்தியைப்பற்றி கடைசி வரை அவர் புரிந்து கொள்ளவில்லை என்பது தான்... Poor fellow....

88

வேறொரு பிடித்த அம்சம் இவர் அடுத்தவேளை சாப்பாட்டுக்கு பணமில்லாத போது பணத்துக்காக கிறிஸ்தவராக மதம் மாறி இருக்கிறார். பின் அந்த பாதிரியாரிடம் போய் "ஃபாதர்...என்னால் சாமி கும்பிடாமல் இருக்க முடியாது....தப்பா நினைக்காதீங்க"....என நேர்மையாக சொல்லி விட்டு வந்திருக்கிறார். அந்த நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு... இந்தியப்பெண்கள் பரிதாபத்துக்குரியவர்கள் என்பதற்கு சாந்தி வில்லியம்ஸ் சிறந்த உதாரணம்.. என தெரிவித்துள்ளார்.

விஜய் டிவி பிரபலம்... காமெடி நடிகர் ஷேசுக்கு திடீர் மாரடைப்பு! காவேரி மருத்துவமனையில் அனுமதி!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved