- Home
- Gallery
- ஹோட்டலை சுற்றி வளைத்த போலீஸ்... தனத்துக்கு பளார் என அறைவிட்ட மாயா - சந்தியா ராகம் சீரியல் அப்டேட்
ஹோட்டலை சுற்றி வளைத்த போலீஸ்... தனத்துக்கு பளார் என அறைவிட்ட மாயா - சந்தியா ராகம் சீரியல் அப்டேட்
சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா மற்றும் சீனு என இருவரும் தனத்தை தேடி வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

sandhya ragam Serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா மற்றும் சீனு என இருவரும் தனத்தை தேடி வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது கார்த்திக் தனத்திற்கு ஜூஸ் கொடுத்து குடிக்க சொல்லி கட்டாயப்படுத்திக் கொண்டிருக்க மறுபக்கம் மாயா மற்றும் சீனு இருவரும் இவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்து சேர்கின்றனர்.
Zee Tamil sandhya ragam Serial
இதையடுத்து இருவரும் ரிசப்ஷனில் வந்து விசாரிக்க, முயற்சி செய்ய குடிபோதையில் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்க ஒரு பக்கம் சீனு ரெஜிஸ்டரை பார்க்க, அதில் கார்த்திக் மற்றும் தனம் ஆகியோரின் பெயர் இருப்பதை கண்டு பிடிக்கிறான். அதேபோல் மாயா அவர்களின் ஆதார் கார்டு இருப்பதையும் கண்டு பிடிக்கிறாள். இதையடுத்து போலீஸ் உள்ளே நுழைய, மாயா இவர்களை தேடிச் சென்றுவிட்ட சீனுவை பார்த்த போலீஸ் இங்க யாராவது தப்பான விஷயத்துக்காக தங்கியிருக்காங்களா என்று கேட்க, ஒரு நிமிஷம் சார் என்று வேலை செய்பவன் போல ரெஜிஸ்டரை பார்த்து ரூமையும் ப்ளோரையும் மாற்றி சொல்கிறான்.
இதையும் படியுங்கள்... இனிமே என் படத்துல நடிக்க வந்துராத... பிரபல ஹீரோவிடம் மூஞ்சில் அடிச்ச மாதிரி சொன்ன மணிரத்னம் - காரணம் என்ன?
sandhya ragam Serial Update
போலீஸ் சீனு சொன்ன ப்ளோருக்கு சென்ற நேரத்தில் மாயா தனம் மற்றும் கார்த்திக் இருக்கும் இடத்தை தேடிப் பிடிக்கிறாள். தனம் ஜூசை குடிக்கப் போகும் நேரத்தில் கதவை தட்டும் சத்தம் கேட்டு ஜூசை குடிக்காமல் கதவை திறக்க, மாயா நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். தனத்தை பார்த்த மாயா கன்னத்தில் பளார் என்று அறை விட, சீனு கார்த்திகை பிடித்து கிட்ட அவன் மன்னிப்பு கேட்கிறான்.
sandhya ragam Serial Today Episode
இதையடுத்து மீண்டும் போலீஸ் கீழே வர, அதற்குள் இவர்கள் அங்கிருந்து எஸ்கேப்பாக முயற்சி செய்ய போலீஸ் வேக வேகமாக சுற்றி வளைக்க, சீனு கரண்ட்டை கட் பண்ணி விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகின்றனர். பிறகு ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி கார்த்திகை திட்டி அனுப்பி விட்டு தனத்தை கூட்டிக்கொண்டு கிளம்பி செல்கின்றனர். கார்த்திக் புவனேஸ்வரிக்கு போன் போட்டு நடந்த விஷயத்தை சொல்ல, அவள் பயங்கர கடுப்பாகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.