எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா மாதிரி விஜய் - திரிஷா... லிப்ட்ல கமுக்கமா செஞ்ச வேலை - தோலுரிக்கும் பாடகி சுசித்ரா
நடிகர் விஜய் - நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய பாடகியான சுசித்ரா பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளதால் சோசியல் மீடியாவில் புயலை கிளப்பி உள்ளது.
Trisha, suchitra
நடிகர் விஜய் - நடிகை திரிஷா இடையேயான உறவு குறித்து பாடகி சுசித்ரா பேசியதாவது : “விஜய்யுடன் சங்கீதாவும் மீண்டும் ஒன்று சேர வேண்டும். ஒரு சின்ன சண்டையால் பிரிந்த குடும்பத்தை அவர் ஈகோவினால் சேர்த்து வைக்காமல் இருப்பதால் தான் திரிஷா மாதிரியான ஒட்டுண்ணிகள் நுழைகிறார்கள். லிப்ட்ல அவங்க கமுக்கமா எடுத்த போட்டோவை போஸ்ட் பண்ணதுல இருந்தே, அவங்க விஜய்யை வச்சு எவ்ளோ சொந்தங் கொண்டாட ட்ரை பண்றாங்கனு தெரியுது.
Vijay, Trisha
சொந்தங் கொண்டாடுற வேலையெல்லாம் புடிக்காதது. அதனால தான் நிறைய பேர் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவோட ஒப்பிட்டு பேசுறாங்க. ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு ஒரு ஒட்டுண்ணி தான். அவங்க எம்.ஜி.ஆர் கிட்ட இருந்து அத்தனை அரசியல் நுணுக்கங்களையும் கத்துக்கிட்டு அப்புறமா எம்.ஜி.ஆரையே ஒதுக்கிட்டாங்க. இந்த வருத்தம் கருணாநிதி தாத்தாவுக்கு கூட இருந்துச்சு. தன் நண்பர் எம்.ஜி.ஆரை அவர் இந்த மாதிரி பண்ணிவிட்டாரே என்பதால் தான் கருணாநிதிக்கு ஜெயலலிதாவை புடிக்காமல் போனது.
இதையும் படியுங்கள்... அவங்க கூட ஜெயம் ரவி இத்தன வருஷம் குடும்பம் நடத்துனதே பெருசு... ஆர்த்தி பற்றி சுசித்ரா சொன்ன ஷாக்கிங் தகவல்
Suchitra says about Vijay, Trisha
எம்.ஜி.ஆருடைய மரணத்துக்கு அப்புறம் ஜெயலலிதா அரசியல் நல்லா பண்ணாங்க. நல்ல பேர் வாங்குறதுக்கு நிறைய பண்ணிகிட்டாங்க. அவர்களைப் போல் ஈ அடிச்சான் காப்பி மாதிரி விஜய் பாலோ பண்ண வேண்டிய அவசியம் இல்லை. இதெல்லாம் அவர் ஜெயிப்பதற்கான வழியும் இல்லை. ஹாஸ்பிட்டல்ல சிலர் இருக்காங்கனா அது அரசாங்கத்துடைய பொறுப்பு. இன்னும் எலெக்ஷனுக்கே வராத ஒரு கட்சியோட பொறுப்பு கிடையாது.
Vijay, Trisha Controversy
விஜய்க்கு யார் இந்த அட்வைஸெல்லாம் கொடுக்கிறார்கள் என தெரியவில்லை. இதெல்லாம் ரொம்ப ரொம்ப தப்பான அட்வைஸ் என சுசித்ரா அந்த வீடியோவில் பேசி இருக்கிறார். இப்படி விஜய்யையும் திரிஷாவையும், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவோடு அவர் ஒப்பிட்டு பேசி இருப்பது சமூக வலைதளத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது. விஜய்யும் அவரது மனைவி சங்கீதாவும் சேர்ந்து எடுத்த புகைப்படம் வெளிவந்தால் தான் இதுபோன்ற சர்ச்சைகளுக்கு முடிவுகட்ட முடியும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... திருமண கொண்டாட்டங்கள் ஸ்டார்ட் ஆகிடுச்சு... கழுத்தில் மாலையோடு நிற்கும் காதலனை கட்டியணைத்து வரவேற்ற வரலட்சுமி