- Home
- Gallery
- திருமண கொண்டாட்டங்கள் ஸ்டார்ட் ஆகிடுச்சு... கழுத்தில் மாலையோடு நிற்கும் காதலனை கட்டியணைத்து வரவேற்ற வரலட்சுமி
திருமண கொண்டாட்டங்கள் ஸ்டார்ட் ஆகிடுச்சு... கழுத்தில் மாலையோடு நிற்கும் காதலனை கட்டியணைத்து வரவேற்ற வரலட்சுமி
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் திருமண கொண்டாட்டங்கள் தற்போது கோலாகலமாக ஆரம்பமாகி உள்ள நிலையில் அதன் போட்டோஸ் வெளிவந்துள்ளன.

varalaxmi
நடிகர் சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவி சாயாவுக்கு மகளாக பிறந்தவர் தான் வரலட்சுமி. இவர் சிம்புவின் போடா போடி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு முன்னரே ஷங்கர் இயக்கிய பாய்ஸ், பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து தந்தை நோ சொன்னதால் நடிக்க மறுத்துவிட்டார் வரலட்சுமி.
Varalaxmi with her lover
போடா போடி படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய வரலட்சுமிக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன. நடித்தால் ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் வில்லி வேடத்திலும் புகுந்து விளையாடினார் வரலட்சுமி. குறிப்பாக விஜய்யுடன் சர்க்கார், தனுஷுக்கு எதிராக மாரி 2, விஷாலின் சண்டக் கோழி 2 போன்ற படங்களில் வில்லியாக மிரட்டினார் வரலட்சுமி.
varalaxmi, Nicholai
ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்ததால் அதுவே அவருக்கு பட வாய்ப்புகள் குறைய காரணமாக அமைந்தது. இதனால் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை சட்டென குறைத்து ஸ்லிம்மான வரலட்சுமி பின்னர் டோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை தட்டிதூக்கி அங்கு பிசியானார்.
இதையும் படியுங்கள்... இயற்கை அழகையே பீட் பண்ணிய பேரழகி... புது வீட்டில் நயன்தாரா நடத்திய நைட் போட்டோஷூட் - வைரல் கிளிக்ஸ் இதோ
varalaxmi fiance Nicholai sachdev
டோலிவுட்டில் இவர் இல்லாத படமில்லை என சொல்லும் அளவுக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் வரலட்சுமிக்கு தற்போது 38 வயது ஆகிறது. இத்தனை ஆண்டுகள் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வந்த வரலட்சுமிக்கு தற்போது ஒரு வழியாக திருமணம் ஆக உள்ளது.
Varalaxmi Sarathkumar engagement
அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலனான நிக்கோலாய் சச்தேவை கரம் பிடிக்க உள்ளார். இவர்களது திருமணம் வருகிற ஜூலை 2-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி உள்ளார் வரலட்சுமி.
varalaxmi sarathkumar wedding rituals
இந்நிலையில், வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ்வின் திருமண கொண்டாட்டங்கள் தற்போது ஸ்டார்ட் ஆகி உள்ளன. இந்த ஜோடியின் திருமண சடங்குகளின் போது மாலை அணிந்தபடி வந்த நிகோலாய்யை காதலோடு கட்டியணைத்து அன்பை பொழிந்துள்ளார் வரலட்சுமி. அப்போது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... அந்த இடத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஆசைப்பட்டேன்... டாக்டர் கொன்றுவேன்னு சொல்லிட்டாரு - நிவேதா பெத்துராஜ்