- Home
- Gallery
- இனிமே என் படத்துல நடிக்க வந்துராத... பிரபல ஹீரோவிடம் மூஞ்சில் அடிச்ச மாதிரி சொன்ன மணிரத்னம் - காரணம் என்ன?
இனிமே என் படத்துல நடிக்க வந்துராத... பிரபல ஹீரோவிடம் மூஞ்சில் அடிச்ச மாதிரி சொன்ன மணிரத்னம் - காரணம் என்ன?
தமிழ் சினிமாவில் பல்வேறு மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்துள்ள மணிரத்னம், பிரபல ஹீரோவிடம் கறாராக கூறிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

srikanth
கோலிவுட்டில் ராசியில்லாத நடிகர்கள் பட்டியலை எடுத்து பார்த்தால் அதில் ஸ்ரீகாந்த் பெயர் கண்டிப்பாக இருக்கும். ஏனெனில் தமிழ் சினிமாவில் வெளிவந்த ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை அவர் நழுவ விட்டு இருக்கிறார். அதன்படி நடிகர் ஸ்ரீகாந்த் முதன்முதலில் நடிக்க இருந்த படம் 12பி. ஆனால் அந்த படம் கடைசி நேரத்தில் கைமாறி ஷியாமுக்கு சென்றுவிட்டது. பின்னர் லிங்குசாமி - மாதவன் கூட்டணியில் வெளிவந்த ரன் பட வாய்ப்பையும் நழுவவிட்டிருக்கிறார் ஸ்ரீகாந்த்.
actor srikanth
இதுதவிர மோகன் ராஜா இயக்கிய எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, பாலாவின் நான் கடவுள், சசி இயக்கத்தில் வெளிவந்த பிச்சைக்காரன் போன்றவை இவருக்கு வந்த படங்கள் தானாம். இதையெல்லாம் நழுவவிட்ட நடிகர் ஸ்ரீகாந்த், மணிரத்னம் இயக்கிய மாஸ்டர் பீஸ் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் நழுவ விட்டிருக்கிறார். அது வேறெதுவுமில்லை ஆயுத எழுத்து திரைப்படம் தான். அப்படத்தில் நடிக்க ஆடிஷனெல்லாம் முடிந்து செலக்ட் ஆகிவிட்டாராம் ஸ்ரீகாந்த்.
இதையும் படியுங்கள்... நிறம் மாறும் தோல்... அடக்கடவுளே ‘மகாராஜா’ பட நடிகை மம்தா மோகன்தாஸுக்கு இப்படி ஒரு அரியவகை நோய் பாதிப்பா?
srikanth missed Aayutha ezhuthu movie
ஆடிஷனில் சூர்யா ரோல் மற்றும் சித்தார்த் ரோல் இரண்டுக்குமே ஆடிஷன் செய்தாராம் ஸ்ரீகாந்த். பின்னர் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் மனசெல்லாம் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்த ஸ்ரீகாந்த், அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக்கொண்டாராம். முகத்தில் தீக் காயங்கள் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார் ஸ்ரீகாந்த்.
maniratnam
அந்த சமயத்தில் மனசெல்லாம் பட தயாரிப்பாளர், தன்னுடைய படத்தை முடித்துவிட்டு தான் வேறு படங்கள் பண்ண வேண்டும், அது மணிரத்னம் படமாக இருந்தாலும் சரி, யாருடைய படமாக இருந்தாலும் சரி என கறாராக சொல்லி மிரட்டினாராம். பின்னர் வேறுவழியில்லாமல் ஆயுத எழுத்து படத்துக்காக வாங்கிய அட்வான்ஸை திரும்ப கொடுத்துவிட்டாராம் ஸ்ரீகாந்த். இதைக்கேட்டு கடுப்பான மணிரத்னம், இவ்வளவு நாள் காத்திருக்க வைத்துவிட்டு திடீரென அட்வான்ஸை திருப்பி கொடுத்ததால் அவரை அவமதித்து போல் ஆனதால், இனிமே என் படத்துல நடிக்க உன்னை ஒருபோதும் கூப்பிடவே மாட்டேன்னு சொல்லிவிட்டாராம் மணிரத்னம்.
இதையும் படியுங்கள்... எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா மாதிரி விஜய் - திரிஷா... லிப்ட்ல கமுக்கமா செஞ்ச வேலை - தோலுரிக்கும் பாடகி சுசித்ரா