ஓட்டை மூடிக்கிச்சா? ரவீனா சொன்ன விஷயத்தால்... வில்லங்கத்தில் சிக்கிய பிரதீப்! யுகேந்திரன் கொடுத்த விளக்கம்!
ரவீனா சொன்ன விஷயத்தை, பிரதீப் எதார்த்தமாக கேட்க அதனை ரவீனா... பிரதீப் டபுள் மீனிங்கில் தான் கூறினார் என சர்ச்சையை கிளப்பிய விஷயம் குறித்து யுகேந்தரன் தற்போது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய பிரபல பாடகரும், நடிகருமான யுகேந்திரன் பிரதீபுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், அவ்வப்போது பிரதீப் குறித்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்து வருகிறார்.
BB Tamil 7
ஏற்கனவே பிக்பாஸ் பற்றி அவர் பேசியபோது, கமல்ஹாசன் மாயாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவரை எதுவும் கேட்க மாட்டார். மேலும் அரசியல் நோக்கத்தை மனதில் வைத்து, பிரதீப் பக்கம் உள்ள எந்த ஒரு நியாயத்தையும் கேட்காமல் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியதற்கு முழுக்க முழுக்க கமல் தான் காரணம் என சாடினார்.
BB Tamil 7
இவர் மட்டும் இன்றி, தற்போது ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் ஆகியோர் தொடர்ந்து பிரதீபுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதால்... புல்லி கேங் அவர்களுக்கு பல் துலக்குவதற்கு பிரெஷ் கொடுக்காமல் ஓவர் டாச்சர் செய்தது எல்லாம் அனைவரும் அறிந்தது தான்.
தொடர்ந்து பிக்பாஸ் வீட்டின் வெளியே இருந்தபடி பிரதீபுக்கு ஆதரவு கொடுத்து வரும் யூகி, ஏற்கனவே ரவீனா கூறிய அரணா கயறு மேட்டர் பற்றி தெளிவு படுத்திய யூகி, தற்போது அந்த மூக்குத்தி சர்ச்சை குறித்தும் பேசியுள்ளார்.
அதாவது ரவீனா மிகவும் எதார்த்தமாக நான் ஏற்கனவே மூக்கு குத்தி இருந்தேன். இப்போ அந்த ஓட்டை மூடிக்கிச்சு என கூறி உள்ளார். இதற்கு பிரதீப் சாதாரணமாக ஓட்டை மூடிக்கிச்சா என கேட்க, இதை வில்லங்கமாக புரிந்த கொண்டு, பிரதீப் மீது அலிகேஷன் செய்தார் என தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D