- Home
- Gallery
- பல கொண்டாட்டங்கள்... பல உணவுகள்..! கூடிய எடையை குறைக்க கணவருடன் ஒர்க் அவுட் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்!
பல கொண்டாட்டங்கள்... பல உணவுகள்..! கூடிய எடையை குறைக்க கணவருடன் ஒர்க் அவுட் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்!
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தன்னுடைய கணவர் ஜாக்கி பக்னானியுடன் ஜிம்மில் எடுத்து கொண்ட போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங், கடந்த 3 வருடங்களுக்கு மேலாக, பாலிவுட் பட நடிகரும் - தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானி என்பவரை காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணம் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி அன்று கோவாவில் உள்ள ஐடிசி கிராண்ட் சவுத் எங்கிற நட்சத்திர விடுதியில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
திருமணத்திற்கு பின்னர், காதல் கணவருடன் ஹனி மூனுக்கு செல்வார் ரகுல் ப்ரீத் சிங் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆன்மீக சுற்றுலா சென்றார். அதே போல் அடுத்தது நடிக்க வேண்டிய படங்கள் உள்ளதால், படப்பிடிப்பை முடித்து விட்டு கணவருடன் ஹனி மூன் செல்ல பிளான் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க... கணவர் ஜாக்கி பக்னானியுடன் ரகுல் ப்ரீத் சிங் ஜிம்மில் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை வெளியிட்டு அவர், பல கொண்டாட்டங்களில் , பல உணவுகள் எடுத்து கொண்டோம். இப்போது கேலோரிகளை எரிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதன் மூலம் கூடிய உடல் எடையை குறைப்பதற்காக ராகுல் ப்ரீத் சிங் கணவருடன் சேர்ந்து ஒர்க் அவுட் செய்ய துவங்கியுள்ளார் என்பது தெரிகிறது.