- Home
- Gallery
- விவாகரத்துக்கு பின்பும் நடிகை மீது தீராக்காதல்! சூரிய கிரணின் மனைவி மற்றும் தங்கை இருவருமே பிரபலங்களா?
விவாகரத்துக்கு பின்பும் நடிகை மீது தீராக்காதல்! சூரிய கிரணின் மனைவி மற்றும் தங்கை இருவருமே பிரபலங்களா?
பிரபல நடிகரும், இயக்குனருமான சூரிய கிரண் மரணமடைந்துள்ள நிலையில்... இவருடைய மனைவி காவேரி மற்றும் குடும்பம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நடிகர், இயக்குனர், என தன்னுடைய திறமைகளை மெருகேற்றிக் கொண்டவர் சூரிய கிரண். குழந்தை நட்சத்திரமாக இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், 'சத்தியம்' என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம், 2003 ஆம் ஆண்டு இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
தெலுங்கில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தனா 51, பிரம்மஸ்திரம், ராஜு பாய், சேப்டர் 6 போன்ற படங்களை இயக்கினார். ஆனால் சமீப காலமாக இவர் இயக்கிய திரைப்படங்கள் பெரிதாக இவருக்கு வெற்றி வாய்ப்பை கொடுக்கவில்லை.எனவே பத்தாண்டுகள் திரை உலகை விட்டு விலகி இருந்த சூரிய கிரண்... 2020 ஆம் ஆண்டு தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டார்.
இவர் பிரபல நடிகை காவேரியை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். மலையாள திரை உலகைச் சேர்ந்த காவேரி பல மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர். தமிழில் அப்பு, சமுத்திரம், காசி ,போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தியாகம் என்கிற சன் டிவி தொடரிலும் நாயகியாக நடித்துள்ளார்.
சூரிய கிரண் இயக்கத்தில் வெளியான சத்தியம், தனா 51 போன்ற படங்களிலும் நடிக்கும் போது... காவேரி மற்றும் சூரிய கிரண் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறி, திருமணத்திலும் முடிந்தது. இவர்களின் திருமணம் 2010 ஆம் ஆண்டு கேரள முறைப்படி நடந்த நிலையில், ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு இந்த ஜோடிகளை வாழ்த்தினர்.
மிகவும் சந்தோஷமாக துவங்கிய இவர்களின் காதல் திருமணம் 6 வருடத்திலேயே முடிவுக்கு வந்தது. 2016-ஆம் ஆண்டு காவேரி, சூரிய கிரணை விட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். ஆனால் விவாகரத்துக்கு பின்பும், சூரிய கிரண் காவேரியை மட்டுமே நினைத்து கொண்டு வாழ்ந்து வருவதாக பிக்பாஸ் வெளியேற்றத்திற்கு பின்னர் கொடுத்த பேட்டியில் தெரிவித்தார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடிகை வரலட்சுமி சரத்குமாரை வைத்து, 'அரசி' என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார் சூரிய கிரண். இந்த படம், விரைவில் ரிலீசாக இருந்த நிலையில்... மஞ்சள் காமாலை காரணமாக உயிரிழந்தார். 48 வயதே ஆகும் இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகை சேர்ந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
sujitha
சூர்யா கிரணின் தங்கை வேறு யாரும் அல்ல... முந்தானை முடிச்சு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் பல்வேறு படங்களிலும் சீரியல்களை நடித்து பிரபலமான சுஜிதா தான். இவர் நடிப்பில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சூப்பர் ஹிட் சீரியலாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்து பிரபலமானவர் சுஜிதா என்பது குறிப்பிடத்தக்கது.