MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Aishwarya - Dhanush Divorce: இறங்கி வந்த தனுஷ்! இரக்கம் காட்டாத ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. விவாகரத்துக்கு காரணம்?

Aishwarya - Dhanush Divorce: இறங்கி வந்த தனுஷ்! இரக்கம் காட்டாத ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. விவாகரத்துக்கு காரணம்?

கடந்த இரண்டு வருடமாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இன்று ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு  வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இவருடைய விவாகரத்துக்கான காரணம் குறித்த தகவல் மீண்டும் சமூக வலைதளத்தில் வைரல் அதிகம் பேசப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Apr 08 2024, 06:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Aishwarya Rajinikanth Marriage

Aishwarya Rajinikanth Marriage

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, ஏற்கனவே பிரபல நடிகர் ஒருவரின் காதலில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் தனுஷ் உடன் நெருக்கம் காட்டி உள்ளார். இது குறித்த தகவல் மீடியாக்களில் கசிந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தே தனுஷின் தந்தைக்கு போன் போட்டு திருமணம் குறித்து பேசி, இவர்களின் காதலை திருமணம் வரை கொண்டு சென்றார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

அதன்படி கடந்த 2004 ஆம் ஆண்டு, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் மிகவும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. இதில் பாலிவுட், கோலிவுட், டோலிவுட், திரை உலகை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டதோடு, தமிழகத்தைச் சேர்ந்த பல அரசியல் ஆளுமைகளும் இந்த திருமணத்திற்கு வந்து இருவரையும் வாழ்த்தி சென்றனர்.

விபத்தில் சிக்கி... சாவில் விளிம்பில் இருந்து மீண்ட இயக்குனர் கே.எஸ்.தங்கசாமி மருத்துவமனையில் இருந்து அறிக்கை!
 

37

மிகவும் சந்தோஷமாக துவங்கிய தனுஷ் - ஐஸ்வர்யா திருமண வாழ்க்கை, வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த நிலையில்... இருவருக்கும் யாத்ரா - லிங்கா என்கிற இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தனர். இந்நிலையில் திருமணம் ஆகி 18 ஆண்டுகள் கழித்து தனுஷ் உடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக ஐஸ்வர்யா விவாகரத்து செய்யும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாக துவங்கியது. 

47

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து விவகாரம்,  மீடியாக்களில் பற்றி எரிய துவங்கிய நிலையில் இருவருமே திடீரென தங்களுடைய சமூக வலைதளத்தில் விவாகரத்து பெற்று பிரிய உள்ள தகவலை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். விவாகரத்து குறித்து அறிவித்து இரண்டு வருடங்கள் ஆன பிறகும் இதுவரை, இருவருமே விவாகரத்துக்காக நீதி மன்றத்தை நாடவில்லை.

Nayanthara: விக்னேஷ் சிவனுக்காக... மொட்டை மாடியில் நயன்தாரா பல லட்சம் செலவில் போட்ட பிளான்! வைரல் போட்டோஸ்!
 

57

மேலும் தனுஷ் வீட்டிலும், ரஜினிகாந்த் தரப்பிலும் மீண்டும் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சிகள் மேற்கொள்ள பட்டதாக கூறப்பட்டது. எனவே மீண்டும் இருவரும் இணைந்து வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து பிரபல பத்திரிகையாளரும் உறுதி செய்தார்.

67

ஆனால் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. மேலும் தனுஷ் விவாகரத்து வேண்டாம்... சேர்ந்து வாழலாம் என்கிற ஆசையில் எவ்வளவோ இறங்கி வந்த போதிலும், ஐஸ்வர்யா விவாகரத்து முடிவில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.

தனுஷுடன் இனி சேர வாய்ப்பே இல்லை.! நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
 

77

தனுஷை உருகி உருகி காதலித்து மட்டும் இன்றி, அவன் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆணிவேராக இருந்தவர் என்றால் அது ஐஸ்வர்யா தான். ஐஸ்வர்யாவுக்கு, தனுஷ் மீது இப்படி கோவம் வர காரணம், சில நடிகைகளுடன் தனுஷ் காட்டிய நெருக்கம் என கூறப்படுகிறது. மற்ற விஷயங்களை அவர் சகித்து கொண்ட போதிலும், தனுஷ்... மீண்டும் மீண்டும் செய்த சில விஷயங்களே வெறுப்பாக மாறி விவாகரத்து வரை கொண்டு வந்துள்ளது.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved