சிவனாண்டி மகளா இது... 6 ஆண்டுகளுக்கு பின் கோலிவுட்டில் கம்பேக் கொடுத்த ஸ்ரீதிவ்யாவின் கலக்கல் கிளிக்ஸ்
விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ரெய்டு படத்தில் நடித்துள்ள நடிகை ஸ்ரீதிவ்யா சேலையில் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
sri divya
பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு திரைக்கு வந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார் ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் லதா பாண்டி என்கிற கேரக்டரில் நடிகர் சத்யராஜின் மகளாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே தன்னுடைய துறு துறு நடிப்பால் கவனம் ஈர்த்த ஸ்ரீதிவ்யாவுக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.
Actress sri divya
இதையடுத்து சுசீந்திரன் இயக்கிய ஜீவா படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ரீதிவ்யா, இப்படமும் ஹிட்டானதை அடுத்து விக்ரம் பிரபு ஜோடியாக வெள்ளைக்கார துரை படத்தில் நடித்திருந்தார். அதில், அம்மாடி உன் அழகு செம தூளு என ஒரு பாடல் இருக்கும், அந்த வரிகளுக்கு ஏற்றவாரு அவ்வளவு அழகாக அப்படத்தில் நடித்திருப்பார் ஸ்ரீதிவ்யா. இதையடுத்து மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாக காக்கி சட்டை படத்தில் நடித்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Raid movie heroine sri divya
பின்னர் அதர்வாவுக்கு ஜோடியாக ஈட்டி, ராணா டகுபதிக்கு ஜோடியாக பெங்களூரு நாட்கள், ஜிவி பிரகாஷ் உடன் பென்சில், விஷாலுக்கு ஜோடியாக மருது, விஷ்ணு விஷாலுடன் மாவீரன் கிட்டு என ஒரே ஆண்டில் அரை டஜன் படங்களில் நடித்து செம்ம பிசியான ஹீரோயினாக வலம் வந்தார் ஸ்ரீதிவ்யா. இதற்கு அடுத்த ஆண்டு அட்லீ தயாரித்த சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் நடித்தார். கடந்த 2017-ம் ஆண்டு ரிலீஸ் ஆன அப்படத்தோடு அவருக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
sri divya latest photos
கடந்த 6 ஆண்டுகளாக பட வாய்ப்பு இன்றி தவித்து வந்த ஸ்ரீதிவ்யா தற்போது ரெய்டு படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. ரெய்டு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்ரீதிவ்யா, சேலையில் செம்ம அழகாக போட்டோஷூட்டும் நடத்தி உள்ளார். அந்த போட்டோஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... தன்னுடைய அரசியல் லாபத்திற்காக பிரதீப்பை பலிகடா ஆக்கினாரா கமல்? ரெட் கார்டு சர்ச்சையால் சீறும் நெட்டிசன்ஸ்