MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Nila Wedding Photos: 40 வயதில் காதலரை கரம் பிடித்த நடிகை நிலா! வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்!

Nila Wedding Photos: 40 வயதில் காதலரை கரம் பிடித்த நடிகை நிலா! வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்!

நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரியும், நடிகையுமான மீரா சோப்ரா என்கிற நிலாவுக்கு நேற்று திருமணம் நடந்து முடிந்த நிலையில் இவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Mar 13 2024, 01:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா மற்றும் பரினீதி சோப்ராவின் சகோதரியான மீரா சோப்ரா, நிலா என்கிற பெயருடன்... தமிழ் சினிமாவில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்த 'அன்பே ஆருயிரே' படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெற்றுத்தராத நிலையில், அடுத்தடுத்து ஜாம்பவான், லீ, மருதமலை, காளை, ஜெகன் மோகினி, இசை போன்ற படங்களில் நடித்தார்.
 

25

தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்த நிலா, தன்னுடைய தந்தையின் தொழிலை கவனித்து வந்ததால் பல படங்களில் நடிக்க முடியாமல் போனது.

பாஜக அழைத்து உண்மை தான்..! இணையாததற்கு இது தான் காரணம்? திவ்யா சத்யராஜ் வெளியிட்ட வீடியோ!
 

35

பிரியங்கா சோப்ரா மற்றும் பரினீத்தி சோப்ரா என இருவருமே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்ட நிலையில், நிலாவின் திருமணம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி வந்தது. மேலும் கடந்த மாதம் தன்னுடைய திருமணம் குறித்து அறிவித்தார்.
 

45

இதை தொடந்து தன்னுடைய 40 வயதில், நீண்ட நாள் காதலரான ரக்ஷித் கெஜ்ரிவாலை, பெற்றோர் சம்மதத்துடன் கரம்பிடித்தார். ஜெய்ப்பூரில் நடந்து முடிந்த இவரது திருமணத்தின் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

KPY Bala: கல்லூரி விழாவில் காதல் திருமண மேட்டரை ஓப்பன் செய்த KPY பாலா! காதலி யார் தெரியுமா? குவியும் வாழ்த்து!
 

55

நடிகை நிலா, பிரபல டிசைனர் சப்யசாச்சி உருவாக்கிய சிவப்பு நிற லெஹங்காவில் அழகு தேவதை போல் இருக்கிறார். இவரின் காதலர் ரக்‌ஷித் வெள்ளை நிற ஷர்வானி மற்றும் அதற்கு ஏற்றது போல் ஆபரணங்களும் அணிந்துள்ளார். திருமண புகைப்படங்களை நடிகை நிலா வெளியிட, ரசிகர்கள் தங்களின் இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved