பாஜக அழைத்து உண்மை தான்..! இணையாததற்கு இது தான் காரணம்? திவ்யா சத்யராஜ் வெளியிட்ட வீடியோ!
நடிகர் சத்யராஜ் மகளும், மருத்துவருமான திவ்யா சத்யராஜ் அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ள நிலையில், பாஜக கட்சியில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும் கூறி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
பல பிரபலங்களின் வாரிசுகள், சினிமா துறையை தேர்வு செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில், நடிகர் திவ்யா சத்யராஜின் மகள், பலரின் உயிர் காக்கும் தொழிலான மருத்துவ தொழிலை செய்து வருகிறார். ஊட்டச்சத்து நிபுணரான இவர், 'மகிழ்மதி' என்கிற அமைப்பு ஒன்றை துவங்கி அதன் மூலம் ஏராளமான, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் உதவி வருகிறார்
கடந்த வருடமே தன்னுடைய அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்திய திவ்யா சத்யராஜ், தற்போது தீவிரமாக அரசியலுக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் தற்போது தன்னுடைய அரசியல் நகர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கூறியுள்ளதாவது..." எனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஊடகத்தில் தெரிவித்த போது, எந்த கட்சிகள் சேருவீர்கள்? சத்யராஜ் உங்களுக்காக பிரச்சாரம் செய்வாரா? மேயர் தேர்தலில் போட்டியிடுவீர்களா? ராஜ்யசபா சீட் கேட்பீர்களா? போன்ற கேள்விகளை என்னிடம் கேட்டார்கள்.
நான் அரசியலுக்கு வருவது பதவியை பிடிக்கவோ அல்லது வேறு எதற்காகவோ இல்லை, முழுக்க முழுக்க மக்கள் சேவை செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக மகிழ்மதி இயக்கம் என்ற ஒரு அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறேன். அந்த இயக்கத்தின் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை நாங்கள் இலவசமாக அளித்து வருகிறோம்.
திருமண கோலத்தில்... கழுத்தில் தாலியோடு 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கோமதி பிரியா! வைரலாகும் போட்டோ!
அந்த வகையில் தான் அரசியலிலும் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். என்னை ஒரு கட்சி அழைத்தது உண்மைதான், ஆனால் ஒரு மதம் சார்ந்த கட்சியில் சேர எனக்கு விருப்பமில்லை. அதே நேரத்தில் நான் தனி கட்சி ஆரம்பிக்க போவதும் இல்லை. நான் எந்த கட்சியில் சேர போகிறேன் என்பதை வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அறிவிப்பேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் திவ்யா சத்யராஜ் மதம் சார்ந்த கட்சி என்று கூறியுள்ளது, பாஜக கட்சியை தான் என்பது குறிப்பிடத்தக்கது.