MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கள்ளக்காதலன் துடிதுடிக்க வெட்டி படுகொலை! காரில் இருந்து படியே ரசித்த கள்ளக்காதலி பிரியா! வெளியான பகீர் தகவல்!

கள்ளக்காதலன் துடிதுடிக்க வெட்டி படுகொலை! காரில் இருந்து படியே ரசித்த கள்ளக்காதலி பிரியா! வெளியான பகீர் தகவல்!

பொன்னேரியில் கள்ளக்காதலன் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட போது அவரது கள்ளக்காதலி  பிரியா காரில் இருந்து ரசித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 16 2023, 12:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ponneri murder

ponneri murder

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாலாஜி நகரை சேர்ந்த சசிகுமார் என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன் (27).  திருமணமாகாத இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கணவரை பிரிந்து வாழும் பிரியாவுக்கும் கோபாலகிருஷ்ணணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. 
 

24
gopalakrishnan murder

gopalakrishnan murder

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கோபாலகிருஷ்ணன் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரியா வேறொரு நபருடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். இதனையறிந்த கோபாலகிருஷ்ணன் அடிக்கடி பிரியாவிடம் செல்போனில் பேசி தொந்தரவு செய்து வந்துள்ளார். பிரியாவின் கள்ளக்காதலையும் கண்டித்துள்ளார். பிரியா தன்னை கழற்றிவிட்டதை அறிந்த  கோபாலகிருஷ்ணன்  வீட்டிற்கே சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். 

34
Priya

Priya

இதனால் ஆத்திரமடைந்த பிரியா கள்ளக்காதலனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி தனது காதலன் ரவுடி ஆனந்தன் மூலம் கூலிப்படையை சேர்ந்த 4 பேரை வைத்து கோபாலகிருஷ்ணனை வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவத்தை காரில் இருந்த படியே பிரியா ரசித்துள்ளார். இதனையடுத்து அந்த கும்பல் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பிரியா வந்த காருக்குள் போட்டு விட்டு கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

44
Priya Arrest

Priya Arrest

இந்த சம்பவத்தை அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரியா சென்ற காரை புழல் அருகே வழிமறித்து பிடித்த போலீசார், அதிலிருந்த ரத்தக்கறை படிந்த அரிவாள் மற்றும் கத்திகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரியாவின் ரவுடி காதலன் ஆனந்தன் மற்றும் கூலிப்படையினரையும் போலீசார் கைது செய்தனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved