அட அதான் ஷேவிங் செய்யாமலே இருக்காரா? Clean Shave கெட்டப்பில் இருக்கும் சீமான் தாடி வைத்தது ஏன்? வெளியான உண்மை!
Seeman New Look : அரசியலில் முழுமூச்சாக ஈடுபட்டு வரும் சீமான் அவர்கள், அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.
Politician Seeman
தமிழ் திரை உலகில் பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகிய இருவருடைய திரைப்படங்களை பார்த்து அதன் மூலம் சினிமா மீது கொண்ட ஆசியினால் படங்களை எடுக்க துவங்கியவர் தான் சீமான். இன்று நாம் தமிழர் கட்சியின் தலைவராக இருந்து வரும் சீமான் பல நல்ல திரைப்படங்களை இயக்கி வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1996 ஆம் ஆண்டு இளைய திலகம் பிரபு நடிப்பில் வெளியான "பாஞ்சாலங்குறிச்சி" திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக களம் இறங்கினார். அதன் பிறகு "இனியவளே" மாதவனின் "தம்பி" மற்றும் "வாழ்த்துக்கள்" உள்ளிட்ட திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.
இந்த மனசு யாருக்கு வரும்... சொன்னதை செய்த ராகவா லாரன்ஸ் - விஜயகாந்த் மகன் படத்தில் நடிக்க ஒப்பந்தம்
director Seeman
அதேபோல மணிவண்ணன் அவர்களுடைய "அமைதிப்படை" திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான சீமான் அவர்கள் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக "முந்திரிக்காடு" என்கின்ற திரைப்படத்தில் அவர் ஒரு போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாடல் ஆசிரியராக, பாடகராக, எழுத்தாளராக மற்றும் இயக்குனராக தமிழ் திரை உலகில் பயணித்து வரும் சீமான் அவர்கள் தற்பொழுது அரசியலில் முழுமூச்சாக ஈடுபட்டு வரும் நேரத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
LIC Movie
எப்போதும் கிளீன் ஷேவ் லுக்கில் இருக்கும் சீமான் கடந்த சில நாட்களாகவே தாடி வைத்த முகத்தோடு பொதுவெளிகளில் காணப்படுகிறார். அது ஏன் என்று பலர் குழம்பி வந்த நிலையில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதிப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் LIC திரைப்படத்தில், பிரதீப் ரங்கநாதனின் அப்பாவாக சீமான் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு விவசாயின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் சீமான் அவர்கள் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்காகவே இந்த தாடி கெட்டப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.