MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • குலைநடுங்க வைத்த பல்லடம் கொலை! மறைச்சு வச்சுக்கிற கத்திய காட்டுகிறேன் சொல்லிட்டு! எஸ்கேப்பாக நினைத்த குற்றவாளி

குலைநடுங்க வைத்த பல்லடம் கொலை! மறைச்சு வச்சுக்கிற கத்திய காட்டுகிறேன் சொல்லிட்டு! எஸ்கேப்பாக நினைத்த குற்றவாளி

திருப்பூர் பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை காட்டுவதாக கூறிவிட்டு தப்பிக்க முயன்ற குற்றவாளிக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Sep 05 2023, 10:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் குறைத்தோட்டம் என்ற பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் தவிடு, புண்ணாக்கு விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்கிற குட்டி என்பவர் செந்தில்குமாரிடம் சில மாதங்களுக்கு முன்பு ஓட்டுநராக பணியாற்றி பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் தகராறு ஏற்பட்டு வெங்கடேசனை பணியில் இருந்து நீக்கியுள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இந்நிலையில் செந்தில்குமாரின் வீட்டிற்கு அருகே அமர்ந்து வெங்கடேசன் தனது கூட்டாளிகள் இரண்டு பேருடன் மது அருந்தி உள்ளார். இதனை தட்டிக்கேட்ட செந்தில் குமாரை மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். சத்தம் கேட்டு செந்தில்குமாரின் வீட்டின் அருகே இருந்த அவரது தம்பி மோகன் மற்றும் செந்தில்குமாரின் சித்தி ரத்தினம்மாள் மற்றும் மோகனின் தாய் புஷ்பவதி ஆகியோரையும் அந்த கும்பல் வெட்டி சாய்ந்தது. இதில், 4 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்தது. 

34

கொலையில் ஈடுபட்டவர்கள் கொலைவெறியில் வெட்டியதால் அந்த தெரு முழுவதும் கொலை செய்யப்பட்டவர்களின் கை, கால்கள் மற்றும் உடற்பாகங்கள் சிதறிக்கிடந்தன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;- காதல் கணவர் கொலை.. மாமா.. என்ன தனியாக தவிக்க விட்டுட்டு போயிட்டியே.. கதறும் 22 வயது மனைவி..!

44

இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது கொலைக்கு பயன்படுத்திய கத்தியை தொட்டம்பட்டி என்ற இடத்தில் மறைத்து வைத்துள்ளதாக கூறியதை அடுத்து செல்லமுத்துவை போலீசார் அழைத்து சென்ற போது  தப்பிக்க முயற்சித்த போது கீழே விழுந்ததில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்டு போலீசார் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved