கொங்கு மண்டலத்தில் கொட்டப் போகும் கனமழை! 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
இன்று, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை மழை தாமதமாகத் தொடங்கினாலும் பரவலாக பல இடங்களில் மழை பெய்துவருகிறது. கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இந்த கோடை மழை 22ஆம் தேதி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் 21ஆம் தேதி வரை சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இன்று, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழில் 100க்கு 100 எடுத்த மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
நாளை கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
கொங்கு மண்டலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தனியார் வானிலை அறிவிப்பாளர் கோயம்புத்தூர் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கேரளாவில் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், நிக்கோபார் தீவுகளில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மழை பெய்யும் போது AC ஆன் பண்ணலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்வது என்ன?