காரமான சுவையில் ஈவ்னிங் ஸ்நாக்ஸாக ஒட்ஸ் மசாலா வடை..! சூப்பராக செய்ய இதோ ரெசிபி..!
ஆரோக்கியமான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் ஒட்ஸ் மசாலா வடை சிறந்த தேர்வாகும். வாங்க எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்..
ஓட்ஸ் பற்றி சிறப்பு அறிமுகம் தேவையில்லை. ஏனெனில் இதை பற்றி நம் அனைவருக்கும் ஏற்கனவே தெரியும். உடலுக்கு நன்மை தரக்கூடிய பொருட்களில் ஓட்ஸும் ஒன்று. ஓட்ஸை பலர் தோசை, இட்லி, உப்மா செய்து சாப்பிடுவார்கள். அந்தவகையில், ஓட்ஸில் மசாலா வடை செய்யலாம் தெரியுமா..? ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்புபவர்களுக்கு இந்த ஒட்ஸ் மசால் வடை சிறந்தது. இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். எனவே, இப்போது ஓட்ஸில் மசாலா வடை செய்வது எப்படி? இவற்றுக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை இப்போது பார்க்கலாம் வாருங்கள்.
ஓட்ஸ் மசாலா வடைக்கு தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு - 1கப், ஓட்ஸ் - 1/4 கப், வெங்காயம் - 3 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது), பெருஞ்சீரகம் - 2 டீஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு, கொத்தமல்லி இலைகள், கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: சுவையான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் 'சோயா கட்லட்' ... எப்படி செய்வது..?
ஓட்ஸ் மசால் வடை செய்வது எப்படி:
முதலில் கடலை பருப்பை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 2 மணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி, பருப்பை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கரடு முரடாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள். பிறகு அந்த மாவில் ஓட்ஸ், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி உப்பு, பெருஞ்சீரகம், கொத்தமல்லி இலைகள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைத்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: Banana Halwa : வாழைப்பழம் இருக்கா..? அப்ப 'அல்வா' செய்யலாம் வாங்க.. ரெசிபி இதோ!!
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்கு சூடானதும் அடுப்பை சிம்மில் வைக்கவும். பிறகு கையில் வடை மாவை தட்டி சூடான எண்ணெயில் போட்டு மொறுமொறுப்பாக மாறும் வரை பிரட்டி பிரட்டி போட வேண்டும். அவ்வளவு தான் இப்போது காரமான சுவையில் மொறுமொறுப்பான ஓட்ஸ் மசாலா வடை ரெடி!! இந்த வடையை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது புதினா சட்னி மற்றும் தக்காளி கெட்ச்அப் வைத்து சாப்பிடலாம். இந்த வடையை அனைவரும் சாப்பிடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். உடனே செய்து விடலாம். ஏன் தாமதம், ஒருமுறை கண்டிப்பாக செய்து பாருங்கள்.. உங்களது பதிலை எங்களுக்கு தெரிவியுங்கள்...
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D